உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர விண்ணில் பாய்ந்தது பால்கன் - 9 ராக்கெட்!

சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர விண்ணில் பாய்ந்தது பால்கன் - 9 ராக்கெட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும், சுனிதா, வில்மோரை அழைத்து வர விண்ணில் 'பால்கன் - 9' ராக்கெட் பாய்ந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xioxvjzh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்தாண்டு ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து இவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து பலமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.இதனால், எட்டு நாட்களுக்கான பயணம் நீடித்தது. தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக, சில தினங்களுக்கு முன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட்டை செலுத்துவதாக இருந்தது. கடைசி நேரத்தில், 'பால்கன் - 9' ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று (மார்ச் 15) புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:33 மணிக்கு, ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. விரைவில், விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும், சுனிதா, வில்மோர் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

canchi ravi
மார் 16, 2025 16:56

நலமுடன் திரும்பவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.


SP
மார் 15, 2025 21:49

நல்லபடியாக நலமுடன் திரும்பி வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் வேண்டுவோம்


PRAVEEN M
மார் 15, 2025 16:49

முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்


M. PALANIAPPAN, KERALA
மார் 15, 2025 11:31

சுனிதா வில்லியம்ஸ் & வில்மோர் இருவரையும் 9 மாதங்களுக்கு பின்பு மீட்பதற்றகு எடுத்த முயற்சிக்கு நன்றி, இருவரும் நல்ல முறையில் பூமிக்கு திரும்பிவர இறைவன் அருள் புரிய வேண்டும், நல் வாழ்த்துக்கள்


பிரேம்ஜி
மார் 15, 2025 10:37

நலமாக திரும்பி வர இறைவனை வேண்டுகிறோம்!


கிஜன்
மார் 15, 2025 09:55

நல்லபடியா திரும்ப வாங்கம்மா .... எந்நாட்டவர்க்கும் இறைவனான ....சிவபெருமான் துணையிருப்பார் ...


Ram
மார் 15, 2025 09:37

We pray the Almighty for her safe return


Oru Indiyan
மார் 15, 2025 08:25

சுனிதாவின் சொந்த ஊரில் செய்த பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்.


HoneyBee
மார் 15, 2025 08:07

இறைவன் அருளால் மீண்டும் நல்லபடியாக பூமிக்கு திரும்பி வர வேண்டும்..


Minimole P C
மார் 15, 2025 07:36

Let God bless them to return safely to earth. Wishes and prayers.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை