உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மணிலா ஏர்போர்ட்டில் கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மணிலா ஏர்போர்ட்டில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மணிலா : ஹாங்காங் நாட்டிலிருந்து நேற்று விமானத்தில் வந்திறங்கிய பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், 79, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக இருப்பது பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர். கடந்த 2022ம் ஆண்டில், டியுடெர்ட்டியை வீழ்த்தி, மார்கோஸ் அதிபரானார். மணிலாவின் முன்னாள் மேயராக இருந்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க முற்பட்ட டியுடெர்ட், அதற்காக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலரை மொத்தமாக கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை, அவரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட், முன்னாள் அதிபர் டியுடெர்ட்டியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது. அதன்படி நேற்று, ரோட்ரிகோ டியுடெர்ட், மணிலா சர்வதேச விமான நிலையத்தில் ஹாங்காங்கில் இருந்து வந்து இறங்கியதும், மணிலா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Laddoo
மார் 12, 2025 07:38

இந்த இன்டர்நேஷனல் கோர்ட் எவன் காசு சாரி கேஸ் கொடுத்தாலும் அவர் மீது ஆணை பிறப்பித்திவிடும். இந்திய கொலிஜியம் போல. பழைய பிலிபைன்ஸ் ஜனாதிபதி தலை விரித்தாடிய உள்நாட்டு போதை மாபியாவை கட்டுக்குள் கொண்டு வந்தார். மனித உரிமையை மதிக்க தெரியாதவனுக்கு எதற்கு இந்த கோர்ட் வக்காலத்து வாங்கணும்? இம்மாதிரி ஜனாதிபதி ஆட்கள்தான் தர்போது டுமீல் டாஸ்மாக் நாட்டுக்கு தேவை. அண்ணாமலை தலைமை தாங்கினால் தான் தமிழக மக்களுக்கு நிம்மதி மற்றும் முன்னேற்றம்


Senthoora
மார் 12, 2025 07:14

இவர் இலங்கைக்கு அதிபராக வேண்டியவர், அங்கே போதை, துப்பாக்கி கலாச்சார கொலை இப்போ, ராஜபசக்ஸ கூட்டணி வளர்த்துவிட கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது.


Laddoo
மார் 12, 2025 09:01

கட்டு மன்னர் வாரிசு குடும்பம் போலேயா ? 200ரூவாவுக்கு புத்தி வந்துடுச்சு போல சபாஷ்


RAJ
மார் 12, 2025 04:11

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்..... வெங்காயம்.. .. இப்போ பங்காளதேஷ்ல இந்துக்களை கொல்றது?? அமெரிக்கா உலக மக்களை கொல்றது? இது எல்லாம் விசாரிக்க வேண்டியதுதானே? புண்ணாக்கு.. . போதை விக்கிறவனை பூ போட்டு கும்பிடணுமா?? ..


Kasimani Baskaran
மார் 12, 2025 03:54

போதைப்பொருள்கள் பல நாடுகளை, காலாச்சாரத்தை மொத்தமாக சீரழித்து விட்டது. இன்னும் பல நாடுகளில் மரண தண்டனை உண்டு. ஆனால் ஹாலந்தில் போதைப்பொருள்களை சாதாரணமாக வாங்கலாம்.


முக்கிய வீடியோ