உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பரா: டிரம்ப் சர்ச்சை பேச்சு

கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பரா: டிரம்ப் சர்ச்சை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்க உள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா, கறுப்பரா என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. சிகாகோவில் நடந்த மாநாட்டில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், '' கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். தற்போது அவர் தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருகிறார். இதனால், அவர் இந்தியரா? கறுப்பரா? என்பது தெரியவில்லை. தற்போது கமலா ஹாரிஸ் வெளிப்படையாக இல்லை'' எனக் குறிப்பிட்டார்.கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் பேசியதற்கு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்துகிறார் என்பது குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை. அது அவரது சொந்த முடிவு. கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும். கமலா ஹாரிஸ் துணை அதிபர் என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து இருக்க வேண்டும் என்றார்.

கமலா ஹாரிஸ் யார்?

ஆப்ரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவில் பிறந்த அவர், வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2016ல் செனட் சபையின் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ல் அதிபர் தேர்தலின் போது, ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை அறிவித்தார். கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

BALOU
ஆக 02, 2024 08:22

கமலா ஹாரிஸ் என்றுமே தன்னை ஒரு இந்தியர் என்று சொன்னதே இல்லை பகிரங்கமாக தன்னை ஒரு கறுப்பின பெண் என்று கூறியுள்ளார் அப்படி பட்டவரை ஏன் இந்தியர் என்று சொல்லி நம்மை நாம் அசிங்கபடுத்தி கொள்ளவேண்டும்


Krishna
ஆக 02, 2024 07:16

அவர் ஒரு பச்சோந்தி


என்றும் இந்தியன்
ஆக 01, 2024 16:59

ஆப்ரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் கலிபோர்னியாவில் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.முன்னுக்குப்பின் முரணான எழுத்து கருத்து இது. கமலா ஹாரிஸ் ஒருக்காலும் மன்னார் குடி அல்லவே அல்ல. பிறந்தது கலிபோர்னியா ஆஃப்ரிக்க தந்தை???அது எப்படி பூர்வீகம் மன்னார்குடி???பூர்வீகம் என்றால் என்ன???நம்முடைய பெயருக்கு முன்னரோ பின்னரோ வருவது தந்தையின் பெயர் ஆகவே தந்தையின் பூர்வீகம் ஆப்பிரிக்கா ஆகவே இவரது பூர்வீகம் ஆப்பிரிக்க தான்


Velan Iyengaar
ஆக 01, 2024 19:30

அவா அவா சட்டத்தை அவாளுக்கு ஏற்றமாதிரி மாத்திக்குவா...


Raa
ஆக 01, 2024 16:51

அமெரிக்க திராவிஷ அமைப்பு செயலாளர்.


RAAJ68
ஆக 01, 2024 16:26

உன்னை விட அவங்க நல்ல வெளுப்பா அழகா இருக்காங்க... உன் நல்ல கண்ணை வைத்து நோண்டி எடுக்க வேண்டும்


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 01, 2024 15:19

டொனால்ட் ட்ரம்ப் பேசியது சர்ச்சையாக இருக்கலாம். ஆனால் கமலஹாரிஸ் தனது இந்திய அடையாளத்தை பூர்வீகத்தை மறைத்தே வருகிறார் . தந்தை பிரிந்த பின்பு முழுவதும் தாயாரால் வளர்க்கப்பட்டவர். அதற்கு பதிலாக தந்தை வழி அடையாளத்தை முன்னிறுத்திகிறது முக்கிய காரணம் வாக்காளர்களின் எண்ணிக்கை


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 18:36

உங்க அமெரிக்க மூர்க்க சகோதரர்கள் எப்படி ????


ஆரூர் ரங்
ஆக 01, 2024 14:45

US சில் சிவப்பிந்தியர் தவிர மீதி எல்லோரும் வந்தேறிகள்தான். இவர்களைத் திருத்த இன்னும் பல ஆபிரகாம் லிங்கன்கள் தேவை.


Narayanan Muthu
ஆக 01, 2024 14:15

டிரம்ப் அமெரிக்காவின் அனுராக்தாக்கூர். இவெனெல்லாம் மனுஷ ஜாதியே இல்லை.


ஆரூர் ரங்
ஆக 01, 2024 16:22

பார்ஸீ தகப்பனாரது மகன் தன்னை பூணூல் அணிந்த கவுல் பிராமணர் தத்தாதிரேய கோத்திரம் என்று கூறினால் கிண்டல் வரத்தான் செய்யும். ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய அனுராக் சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்.


Raa
ஆக 01, 2024 16:50

ஏன் உங்க திராவிட அமைப்பு செயலாளரை விட்டு விட்டீர்கள்? கிருபானந்த வாரியாரை பற்றி கேட்டால், அவர் நம்ம ஜாதிகாரத்தானே என்று பேட்டி கொடுத்தவர்தானே அவர்.. சந்தேகம் வந்தால் ரங்கராஜ் பாண்டே இன்டெர்வியூ பார்க்கவும்


ராமகிருஷ்ணன்
ஆக 01, 2024 13:40

நம்ம தி க விற்கு வேலை வந்து விட்டது. ஜாதி துவேஷம் அமெரிக்கா வரை சென்று விட்டது. உடனடியாக தெருமுனை பிரசாரம் செய்து, ஜாதி வெறியை அடக்க வேண்டும்.


Nallavan
ஆக 01, 2024 13:00

அமெரிக்காவிலும் ஜாதி வெறியா? தேர்தலுக்காக எதையும் பேசும் மனித இனம், விலங்குகளிடமும், பறவைகளிடமும் மனிதன் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகமாக இருக்கிறது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை