உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்த அமெரிக்க அரசு

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்த அமெரிக்க அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா கொலம்பியா பல்கலையின் பிரதான கட்டடத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய 900க்கும் மேற்பட்ட மாணவர்களை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவில் உள்ள பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு வாரங்களாக காசா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டம் தொடர்ந்தது.கொலம்பியா பல்கலையின் பிரதான கட்டடத்தை கைப்பற்றி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்க போலீசார் கடும் முயற்சி செய்தனர். போராட்டம் நடத்திய 900க்கும் மேற்பட்ட மாணவர்களை நியூயார்க் போலீசார் கைது செய்தனர். ஹாமில்டன் கட்டடத்தில் பறக்கவிடப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி பாலஸ்த்தீன கொடியை பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
மே 01, 2024 18:46

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசவிரோத வன்முறைப் போராட்டங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களால் தங்கள் நாட்டில் அது போன்ற போராட்டம் நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு?


kulandai kannan
மே 01, 2024 18:21

தக்காளி சட்னி


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 18:03

திரும்ப அனுப்புங்கள் அவர்கள் நாட்டிற்கு


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 18:00

படிக்க வந்தவர்களை போராட்டத்தில் கைது செய்தது தவறு அவர்களுடைய நாட்டுக்கு திரும்ப உங்கள் நாட்டிற்குள் வர முடியாத படி விசாவை முடக்கி திருப்பி அனுப்பி விடுங்கள்


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 18:00

படிக்க வந்தவர்களை போராட்டத்தில் கைது செய்தது தவறு அவர்களுடைய நாட்டுக்கு திரும்ப உங்கள் நாட்டிற்குள் வர முடியாத படி விசாவை முடக்கி திருப்பி அனுப்பி விடுங்கள்


காஷ்மீர் கவுல் பிராமணன்.
மே 01, 2024 17:45

போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்து அடக்கு ஏவிய அமெரிக்க அரசை கண்டித்து உடனடியாக அமெரிக்க தூதரை அழைத்து இந்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்.


vns
மே 01, 2024 16:48

போராட்டக்காரர்களை கைது செய்து இருந்தால் வெள்ளை பத்திரிகைகள் அதனை கடுமையாக கண்டித்து இருக்கும் கருத்து சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் இந்தியா பிரிவினைவாதம் பற்றி பேசினால் அதனை குற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அமெரிக்க தூதுவர் இப்போது என்ன கூறுவார்?


naranam
மே 01, 2024 17:13

இதையே இந்தியா அரசு செய்தால் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இல்லை என அமெரிக்கா அரசும் ஊடகங்களும் கூச்சலிடும்.


Duruvesan
மே 01, 2024 16:45

வாஷிங்ஷன் போஸ்ட் இப்போ என்ன ?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ