| ADDED : ஜூலை 29, 2024 07:19 AM
பீஜிங் : சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளை மூடியது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்டோரை மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். தரைமட்டமான வீடுகளுக்குள் சிக்கி இருந்த 18 பேரில், 11 பேர் இறந்தது தெரியவந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆறு பேரை, மருத்துவமனையில் அனுமதித்தனர்.