உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்கொள்வோம்: ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்கொள்வோம்: ஜெய்சங்கர்

டப்ளின்: ''பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்கொள்வோம்,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், அயர்லாந்தில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராஜதந்திரம்

பிரிட்டனைத் தொடர்ந்து, அயர்லாந்து சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஹிக்கின்சை சந்தித்தார். இதையடுத்து, டப்ளினில் உள்ள, 'யுனிவர்சிடி காலேஜ் டப்ளின்' என்ற உயர் கல்வி நிறுவனத்தில், இந்திய துாதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பயங்கரவாதம் என்பது இன்றளவும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பிரச்னையாக இருப்பது குறித்து இந்தியா கவலை அடைகிறது. நீண்டகாலமாக பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சராக, இதை நான் பேசுவது பொருத்தமாக இருக்கும். பயங்கரவாதம் என்ற சவாலை உறுதியுடன் நாம் எதிர்கொள்வோம். எந்தவித மோதல்களையும் பேச்சு, ராஜதந்திர ரீதியாக தீர்க்கலாம். அயர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று தொடர்பு உண்டு. இந்திய முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, இங்குதான் சட்டம் பயின்றார். இன்றும் 13,000 இந்திய மாணவர்கள் அயர்லாந்தில் படிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

கண்டனம்

லண்டனில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்ற காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பிரிட்டனுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், “இரு நாட்டு உறவை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது போல், இந்த தாக்குதல் சம்பவம் இருக்கிறது. ''இதற்கு மிகப்பெரிய பின்னணி இருக்கிறது. இந்த சம்பவத்திலும் முந்தைய நிகழ்வுகளிலும் பயங்கரவாதிகள் மீது பிரிட்டன் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் நேர்மைத்தன்மை குறித்த நம்பார்வை அமையும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

orange தமிழன்
மார் 08, 2025 08:14

பிரிட்டன் நமக்கு நண்பன் அல்ல எப்பொழ்தும் அவர்கள் நம்மை அடிமை என்று தான் பார்ப்பார்கள்.. நம் நாடு வளர்ச்சி பெறுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது......நாம் தான் அவர்களை நம்ப கூடாது.......ஜெய் ஹிந்த்.....


Kasimani Baskaran
மார் 08, 2025 07:31

கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுவாகவே தீவிரவாத நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள். டிரம்பால் பல மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அடுத்து இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்கு பாதுகாப்பை குறைத்தால் எல்லாம் சரியாகிவிடும்.


अपावी
மார் 08, 2025 07:13

இங்கிலாந்து அடிக்கடி.போய் அந்நிய அடையாளங்களை அழிப்போம்.


SUBBU,MADURAI
மார் 08, 2025 06:42

The entire Europe including London has been captured by Muslim refugees and Khalistani, in which expectation of action from the UK government will be meaningless. UK is on a complete self destruction mode and has become more unsafe than Pakistan at this time. Europe is going to be threatened with total domination by millions of hostile Muslim migrants.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை