உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி7 உச்சி மாநாட்டின் குழு போட்டோவில் மோடிக்கு நடுவில் இடம்: வைரலாகும் போட்டோ

ஜி7 உச்சி மாநாட்டின் குழு போட்டோவில் மோடிக்கு நடுவில் இடம்: வைரலாகும் போட்டோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜி7 உச்சி மாநாட்டின் குழு போட்டோவில் மோடி நடுவில் நின்றுகொண்டிருப்பது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த குழு போட்டோவை கொண்டாட தொடங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.G7 உச்சி மாநாட்டையொட்டி, வெள்ளிக்கிழமை இத்தாலியின் அபுலியா நகரில் பிரதமர் மோடி பல உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இந்த சந்திப்பின் முடிவில் தலைவர்கள் கூட்டாக நின்று எடுத்து கொண்ட புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் வோலோடிமியர் ஜெலென்ஸ்கி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட உலக தலைவர்களுடன் எடுத்து கொண்ட குழு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.அந்தப் புகைப்படத்தில், பிரதமர் மோடி நடுவில் நின்றுகொண்டுள்ளார். இது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை காட்டுவதாக பாஜகவினரும் மோடி ஆதரவாளர்களும் கொண்டாட தொடங்கியுள்ளனர். அந்த போட்டோவில் கீழே இறங்கி உள்ளார். ஜோ பிடன். இந்நிலையில் இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Md anas
ஜூன் 17, 2024 22:14

நல்ல கிராபிக் உற்று நோக்கினால் தெரியும்


Md anas
ஜூன் 17, 2024 22:12

Good graphics see in zoom


Sakthivel
ஜூன் 17, 2024 21:00

பின் வரிசைக்கு தள்ளிப்பட்ட பிரதமர்


Karthikeyan
ஜூன் 17, 2024 17:56

மோடிஜிக்கு எங்கும் மரியாதைதான்... ஏனென்றால் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் நம்நாட்டை உலகில் தலைநிமிரச் செய்த தன்னிகரில்லா, அப்பழுக்கற்ற தலவர் அவர்...இதைப் பார்த்து காங்கிரஸ்காரன் என்ன உளரினாலும் அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை...


naranan
ஜூன் 17, 2024 17:29

அவளோ தான்,


krishnamurthy s
ஜூன் 17, 2024 11:33

மோடி ஜி. மக்களே நாம் thaan சுற்றுப்புறத்த சுத்தமாக வாய்க்க உதவவேண்டும்


தலைவன்டா
ஜூன் 17, 2024 09:24

தன்னம்பிக்கை மற்றும் நேர்மையாக உள்ள தலைவன் தான் இது போன்ற நிகழ்வுகளிள் மைய புள்ளியாக முடியும். அந்த வகையில் நம்மவர் தான் இப்போது முதலில் உள்ளார். இவருக்கு எதிராக வாக்களித்த நடு நிலை மக்கள் சிந்திக்க வேண்டும்


venugopal s
ஜூன் 17, 2024 06:56

பாஜக ஐ டி விங் இப்போது இந்த வேலையிலும் இறங்கி விட்டார்களா?


hari
ஜூன் 17, 2024 08:13

ஏன் உன் கட்டுமரம் கூட கிராபிக்ஸ் பண்ணலாமே வேணு


sankaranarayanan
ஜூன் 17, 2024 06:10

ஜி7 உச்சி மாநாட்டின் குழு போட்டோவில் மோடி நடுவில் நின்றுகொண்டிருப்பது இன்டியா கூட்டணி தலைவர்களுக்கு பிடிக்காதே இனி அதற்கு அவர்கள் ஒவ்வொருவராக கமெண்டு அடிப்பார்கள் இதை நாட்டின் பெருமையாக கருத்தவே மாட்டார்கள் ரமேஷுக்கு புரிந்ததா?


Lalitha Shankar
ஜூன் 17, 2024 00:19

மோடி ஜி சூப்பர்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி