உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் மோடி

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று (ஜூலை08) அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (ஜூலை 08) பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். ரஷ்ய அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கை கொடுத்து அன்பை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து இன்று இரவு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகையில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், எரிசக்தி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தார். இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பங்கேற்கிறார். பின் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் அறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடிக்கு புடின் பாராட்டு

ரஷ்ய அதிபர் புடின், மக்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள் என பிரதமர் மோடியை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூலை 09, 2024 05:42

போரை முடிவுக்கு கொண்டு வரும் மோடியின் முயற்சி பாராட்டத்தகுந்தது.


RAJ
ஜூலை 09, 2024 00:06

மோடி ஜி மாமனிதர்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை