மேலும் செய்திகள்
ஹிந்து இளைஞர் படுகொலைக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
6 hour(s) ago
பால்டிமோர், அமெரிக்காவில், ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதில், உடைந்து மூழ்கியது. பாலத்தில் சென்ற ஏராளமான வாகனங்களும் ஆற்றில் மூழ்கியதால், மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணத்தின் பால்டிமோர் என்ற இடத்தில், பிரான்சிஸ் ஸ்காட் பாலம், 2.6 கி.மீ., நீளத்துக்கு, ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 'டாலி' என்ற சரக்கு கப்பல், பால்டிமோரில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக, பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் துாணில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாலம் முழுதும் இடிந்து விழுந்து ஆற்றில் மூழ்கியது.அப்போது கார்கள், இருசக்கர வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் பாலத்தில் சென்றதால், அந்த வாகனங்களும் ஆற்றில் மூழ்கின. மேலும், பாலத்தின் மீது மோதியதால், சரக்கு கப்பலின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ஆற்றில் 20க்கும் மேற்பட்டோர் மூழ்கி இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதுவதும், கண்ணிமைக்கும் நேரத்தில் பாலம் இடிந்து ஆற்றில் மூழ்குவதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. விபத்து நடந்த பகுதியில், ஏராளமான மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீரில் மூழ்கியோரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இந்த கப்பலில் இருந்த பணியாளர்கள் 22 பேரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
6 hour(s) ago