உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாள பஸ் விபத்து: இந்தியர் உடல் மீட்பு

நேபாள பஸ் விபத்து: இந்தியர் உடல் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை, காத்மாண்டு நோக்கிச் சென்ற பஸ்சில் ஏழு இந்தியர் உட்பட 24 பயணியரும், கவுர் என்ற இடத்துக்கு சென்ற பஸ்சில் 30 உள்ளூர் மக்களும் பயணித்தனர்.இந்த பஸ்கள் சித்வான் மாவட்டம், சிமல்தால் பகுதியில் நாராயண்காட் - முக்லிங் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், இரண்டு பஸ்களும் திரிசூலி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் மூவர் மட்டும் நீந்தி உயிர் தப்பினர். மற்ற 51 பேரை காணவில்லை. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 கி.மீ., துாரத்தில், நாராயணி ஆற்றில் நேற்று ஒரு உடல் சேற்றில் புதைந்திருந்தது. அவரது அடையாள அட்டையை பரிசோதித்ததில், அவர் இந்தியாவைச் சேர்ந்த ரிஷி பால் சாஹி என்பது தெரியவந்தது. மற்ற ஆறு இந்தியர்கள் உட்பட 50 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நேபாள ராணுவத்தினர், போலீசார், நீச்சல் வீரர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ