உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல; ஒபாமா வெளிப்படை!

நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல; ஒபாமா வெளிப்படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஆக உள்ள வான்ஸ் ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்துகள். இது வெளிப்படையாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல' என அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபராக உள்ள வான்ஸ் ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இது வெளிப்படையாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல. தேர்தலில் தோல்வியை சந்தித்த துணை அதிபர் கமலா ஹாரிசின் முயற்சிக்கு பாராட்டுகள். பிரசாரத்தில் நான் கூறியது போல், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா பல்வேறு சிக்கல்களை சந்தித்து உள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அந்த நிலைமைகள் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகப் பொறுப்பாளர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த பிரச்னைகள் தீர்க்கக்கூடியவை. நாம் ஒருவருக்கொருவர் செவிசாய்த்தால் மட்டுமே, இந்த நாட்டை சிறந்ததாக மாற்ற முடியும். இதற்கு, அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மக்களுக்கு நல்ல நம்பிக்கையையும், கருணையையும் வழங்க வேண்டும். இப்படித்தான் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம், அப்படித்தான் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு பராக் ஒபாமா கூறியுள்ளார்.கமலா ஹாரிசின் தேர்தல் பிரசாரத்தில் ஒபாமா பங்கேற்று, ஆதரவு திரட்டினார். ஒபாமா மனைவி மிச்செல் கமலா ஹாரிசின் இரண்டு தேர்தல் பிரசார கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Balasubramanian UnitedStates
நவ 08, 2024 04:25

during his period there were so many wars happened and over the heat relations with Russia were much worse. except for Trumps period, all other presidents focused on war and he does not have the right to tell about the election results. he is the total waste guy.


வாய்மையே வெல்லும்
நவ 07, 2024 16:31

ஒபாமா அவர்களே எங்கூரு இல்லைல்ல ஜப்பான் முதலமைச்சரை ஒருகால் கூட்டிட்டு போய் வோட்டு கேட்அமெரிக்கை மக்களிடம் நம்மூரு பாஷை தமிழில் பேச வைத்துஇருந்தால் கமலா ஹாரிஸ் இந்நேரம் அமெரிக்கா அதிபர் இல்ல உலகத்துக்கே அதிபராயிருப்பாரே ..நாங்க சொன்னா நீங்க கேட்கமாட்டேங்களே . பிறகு என்ன செய்ய.. நம்மாளு துண்டுசீட்டுல அவியல் அரசியல் பிரமாதமாக உருட்டுவாரே அது உலக ப்ரஸித்தியாச்சே அன்னாரின் அரசியல் தந்திரங்களை பார்க்க குடுத்துவைக்கவில்லை அமெரிக்கா மக்கள்..


Sivagiri
நவ 07, 2024 13:50

அமெரிக்கன் ப.சி .


S Regurathi Pandian
நவ 07, 2024 10:11

அமெரிக்காவிலும் விலைவாசி உயர்வு பிரச்சினை வெளிப்படையாக பேசப்பட்டும் நிலை உருவாகியுள்ளது. வெகுசில முதலாளிகளுக்கான பொருளாதார கொள்கைகள் பெரும்பான்மை மக்களை பாதிப்பது உறுதியாகியுள்ளது