உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார்; முதல் முறையாக அறிவித்த டாக்டர்கள்

போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார்; முதல் முறையாக அறிவித்த டாக்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்; போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்.14ம் தேதி முதல் அவர் ரோமில் உள்ள ஜெமேலி மருத்துவமனையில் உள்ளார். போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து பல்வேறு விதமான யூகமான தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவரின் உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றிய உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை.இந்நிலையில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் ஜெர்ஜியோ அல்பியரி, லுகி கார்போன் ஆகியோர் கூறியதாவது; அபாய கட்டத்தை போப் பிரான்சிஸ் தாண்டி விட்டாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சையில் உள்ளாரா என்றால் அதற்கும் இல்லை என்று தான் சொல்வோம்.இப்போது தான் அவரின் (போப் பிரான்சிஸ்) அறைக்குச் சென்று 20 நிமிடங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு வந்துள்ளோம். தற்போதைய நிலை என்பது இதுதான். அவரும் ஒரு சாதாரண மனிதர் தான்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராமகிருஷ்ணன்
பிப் 23, 2025 05:02

இந்துக்களின் மேல் காட்டப்படும் வன்மம் தான் திரும்பி வருது. விசுவாச கும்பல் பொத்திகிட்டு இருக்கனும்.


sridhar
பிப் 22, 2025 17:13

நாலுமாவடியில ஒரு பொய்யன் sutthi கிட்டு இருக்கானே , அவனை அங்கே அனுப்பலாமே .


sridhar
பிப் 22, 2025 17:11

// அவரும் ஒரு சாதாரண மனிதர் தான் // இதை நாங்க இங்கே சொன்னா எங்களை திட்டறாங்க .


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2025 15:04

அவரை விஷநரிகள் பிரார்த்தித்து குணப்படுத்தலாமே ??


Amar Akbar Antony
பிப் 22, 2025 13:34

ஐயோ ஜீசஸ் அந்தம்மா கனவில் வந்து காரும் பொருளும் தந்தாங்களே


அ.சகாயராசு
பிப் 22, 2025 12:56

போப் இறைவனுக்கு இனையானவர் வயது 88 ல் அவரை கிண்டல் செய்யாமல் இறைவனை வேண்டுவதே சிறந்தது..


Kumar Kumzi
பிப் 22, 2025 13:33

அப்போ போப்பாண்டவர் மீண்டு வருவார்


தமிழ்வேள்
பிப் 22, 2025 21:04

உங்கள் மதத்தின் ஆசாமிகளுக்கு ஹிந்து தர்மத்தை கேவலமாக பேசவில்லை என்றால் தூக்கம் வராது... சொர்க்கம் கிட்டாது... உங்கள் ஆட்களிடம் இந்த அறிவுரையை இயன்றவரை சொல்லவும்.. ஆனால் சொன்ன பின் உங்களுக்கு ஏதாவது சேதம் அடிகிடி பட்டால் கம்பெனி பொறுப்பாகாது


Natarajan Ramanathan
பிப் 22, 2025 11:35

அற்புத சுகமளிக்கும் சிடியுடன் இங்கிருந்து யாரையாவது உடனே அனுப்பலாம்


Ramesh Sargam
பிப் 22, 2025 11:34

தமிழகத்தில் ஒரு சில கிறிஸ்துவ மத போதகர்கள் பிணியாளர்களை கையால் தொட்டு குணப்படுத்துகின்றனர். போப் அவர்களை இவர்கள் அப்படி குணப்படுத்தலாமே ...


R S BALA
பிப் 22, 2025 11:18

அவரும் ஓர் சாதாரண மனிதர்தான்.. அடப்பாவமே.


தமிழ்வேள்
பிப் 22, 2025 11:17

சர்வரோக நிவாரணி என்று சிடி விற்று துட்டு பார்க்கும் மோகன் லாசரஸ் , முடவர் நடக்கிறார் , குருடர் பார்க்கிறார் , ஆகவே தசமபாகம் கொடுங்கள் என்று பிச்சையெடுக்கும் அண்ணன் பவுல் தினகரன் போன்ற ஏசுவின் டைரக்ட் ஏஜெண்டுகள் , தங்கள் தெறமை முழுவதையும் காட்டி போப்பை குணப்படுத்தலாமே ? அப்புறம் வாட்டிகன் நம்முதுதானே ? என்ன நான் சொல்றது ?


முக்கிய வீடியோ