ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; உக்ரைனில் 23 பேர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கீவ்: போர் நிறுத்த பேச்சு நின்ற நிலையில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால், உக்ரைனில் 23 பேர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=10mmtto4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் பேச்சு நடத்தினார். அதில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டு, உக்ரைன் அதிபர் வெளியேறினார்.இதைத் தொடர்ந்து, போரை நிறுத்தும் முயற்சியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ மற்றும் கடன் உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியது.இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு இடங்களில், ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல்களை தீவிரமாக்கியது. குறிப்பாக டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரபிலியாவை நோக்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 23 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ராணுவ, பொருளாதார உதவிகளை நிறுத்திய அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கி வந்த சாட்டிலைட் தகவல் பரிமாற்றத்தையும் நிறுத்திஉள்ளது. இது உக்ரைனின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.