வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நான் இவ்வளவு தூரம் விபரமாக விளக்கிய பின்னும் அதை புரிந்து கொள்ளாமல் ரஷ்ய அதிபர் புடினை சர்வாதிகாரி என்றும் சிறு நாடுகளின் கதி வீழ்ச்சிதான் என்று சொல்வது அறியாமை. சிறு நாடுகள் வாலை சுருட்டிக் கொண்டு ஒழுங்காக இருக்க வேண்டும் அதை விட்டு திமிரெடுத்து போய் நான் ரஷ்யாவின் எதிரிகளான நேட்டோ நாடுகளுடன் சேரப் போகிறேன். அவர்களின் நேட்டோ படைகளை உக்ரைனில் அனுமதித்து ரஷ்ய எல்லையில் நிறுத்தி ரஷ்யாவை அனுதினமும் அச்சுறுத்திக் கொண்டே இருப்பேன் என்று சொன்னால் அப்றம் மிதி வாங்க வேண்டியதுதான். அப்படித்தான் இப்போது உக்ரைன் அதிபரான கோமாளி ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் தர்ம அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்.
இப்போது இருக்கும் ரஷ்யா முன்பு ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக The Union of Soviet Socialist Republics USSR அதாவது சோசலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியமாக 1922 முதல் 1991 வரை இருந்த ஒரு நாடாகும். இது ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் மற்றும் பல குடியரசுகள் உட்பட 15 குடியரசுகளால் ஆனது. சோவியத் ஒன்றியம் உலகின் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாகும். 1980 ம் ஆண்டிலிருந்து அந்த நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய தொடங்கியது. அப்போது ரஷ்ய அதிபராக இருந்த Mikhail Gorbachevமிகைல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தை தனது பெரெஸ்ட்ரோயிகா மற்றும் சில கொள்கைகளுடன் நாட்டை சீர்திருத்த முயன்றார். அதில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின் 1991 ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப் பட்டது. அப்படி கலைக்கப் பட்ட நாடுகள் தனித்தனியாக பிரிந்து பால்டிக் மற்றும் மத்திய ஆசியாவில் தங்களை சுதந்திர குடியரசுகளாக அறிவித்துக் கொண்டன. அப்படி ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகள்தான் இப்போதிருக்கும் பெலாரஸ்,உக்ரைன்,மாஸ்தோவா,ஆர்மேனியா,மல்தோவா,கசக்ஸ்தான்,அஜரபைஜான்,உஸ்பெகிஸ்தான்,துருக்மெனிஸ்தான்,கிர்கிஸ்தான்,தஜிகிஸ்தான்,லித்துவேனியா உட்பட இன்னும் மூன்று நான்கு நாடுகள் பெயர் மறந்து போச்சு, அந்த நாடுகள் ரஷ்ய மொழி உட்பட பெலரசியம்,உக்ரேனியம்,லாத்வியம்,எஸ்தோனியம்,ஆர்மேனியம்,அஜர்பஜானி,கசாக்,உஸ்பெக்,துருக்மென்,கஜிக் உட்பட பல மொழிகள் பேசும் நாடுகளாக பிரிந்தன. அப்போது பிரிந்த நாடுகளுக்குள் பல ஒப்பந்தங்கள் போடப் பட்டு கையெழுத்தாகின. அந்த ஒப்பந்தங்களில் மிக முக்கியமானது ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகள் எக்காரணத்தை கொண்டும் ரஷ்யாவிற்கு எதிராக ரஷ்யாவை வீழ்த்த மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப் பட்ட நேட்டோ நாடுகளில் சேரக்கூடாது என்றும் அப்படி சேர்ந்து தங்கள் நாடுகளில் அவர்களுடைய நேட்டோ ராணுவபடைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் கடுமையாக கூறப்பட்டது. அதற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டுத்தான் மேற்படி நாடுகள் ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனி நாடுகளாகின. ஒப்பந்தப் படி மற்ற நாடுகள் எல்லாம் ஒழுங்காக இருக்க இந்த உக்ரைன் மட்டும் ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க ஜார்ஜ் சோரஸின் Deep state மற்றும் அவர்களின் கையாளான பைடனுடன் சேர்ந்து கொண்டு உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து தங்கள் நாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ படைகளை நுழைய அனுமதிக்க உக்ரைனின் கோமாளி அதிபரான ஜெலன்ஸ்கி ஒப்பந்தம் போட்டதால்தான் ரஷ்ய அதிபர் புடினுக்கு கோபம் வந்து நேட்டோவில் சேரக்கூடாது என்று ஜெலன்ஸ்கியை எச்சரித்தார். அதையும் மீறி கோமாளியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து நேட்டோ படைகளை உக்ரைன் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதியாக அனுமதிப்பேன் என்று சொன்னதால்தான் ஒப்பந்தத்தை மீறி ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ படைகளை அனுமதிக்கும் உக்ரைனை புடின் எச்சரித்தும் ஜெலன்ஸி கேட்காததால் கோபமடைந்த புடின் அவர்களுக்கு பாடம் புகட்டவே உக்ரைன் மீது போரை தொடங்கினார். அந்த போரின் விளைவு உக்ரைனின் முக்கியமான கனிமவளங்கள் நிறைய உள்ள பகுதிகள் உட்பட பல நிலங்களை ரஷ்யா பிடித்துக் கொண்டது. மேலும் உக்ரைனின் பல பகுதிகள் போரினால் சீர்குலைந்து போய்விட்டது. உக்ரைன் ரானுவ வீரர்கள் லட்சக் கணக்கானோர் இந்தப் போரில் இறந்து போயினர். இதனால் ரஷ்யாவிற்கும் சேதம்தான் என்றாலும் டிரம்ப் வந்தபிறகு போரின் வீரியம் குறைந்து இப்போது போரை நிறுத்த பேச்சு வார்த்தை க்கு வந்திருக்கிறார் ஜெலன்ஸ்கி. கடைசியில் இந்த போர் எதற்காக ஆரம்பிக்கப் பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் முடிவு பெறப் போகிறது. இதனால் பெரும் பாதிப்பு அடைந்தது உக்ரைன் மற்றும் இந்த போரை தூண்டி விட்ட ஐரோப்பிய நாடுகள்தான்.
சிம்பிளா சொன்னா புடினுக்கு பழையபடி USSR ஐ உருவாக்கி நிரந்தர சர்வாதிகாரியாக ஆள வேண்டும் எனும் சுற்றியுள்ள நாடுகளை சுரண்டி திங்கும் பேராசை. கையரிப்பு பீடிக்கப்பட்ட பெரியண்ணன் இப்போ இந்தக் கேடியுடன் சேர்ந்து சுரண்ட தயாராகி வருகிறார். இனிமேல் சிறு நாடுகளின் கதி வீழ்ச்சிதான்.
ஸிலின்ஸ்கி அவுட்
உக்ரைன் மக்களின் கருத்தை ஏன் எங்கும் காணமுடியவில்லை?