உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

லாகூர்,நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது டேங்க் மாவட்டம். நேற்று இங்கு ஜன்ட்டோலா கோட்டை அருகே உள்ள ராணுவ முகாம் மீது தற்கொலை படையினர் திடீரென வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படையினர் இரண்டு பேர் காயமடைந்தனர். இதையடுத்து சுதாரித்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் வாயிலாக ராணுவ முகாமை தகர்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது.இதற்கிடையே, ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி