உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கார்கில் தாக்குதல் தவறு தான்; ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரிப்

கார்கில் தாக்குதல் தவறு தான்; ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரிப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான்; கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றஉத்தரவுப்படி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.பின்னர் இங்கிலாந்து சென்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பினார்.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் கட்சியின் தலைவராக தேர்வான நவாஸ் ஷெரீப்,இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என ஒப்புக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

subramanian
மே 29, 2024 23:08

உலகறிந்த உண்மை. நீங்க என்ன ஒப்புக்கொள்வது? எங்கள் மக்களின் கண்ணீர் உங்களை அழிக்கும்.


Ramesh Sargam
மே 29, 2024 22:44

நவாஸ் ஒப்புக்கொண்டாலும், நம் நாட்டில் உள்ள தேசதுரோக அரசியல் கட்சியினர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.


A1Suresh
மே 29, 2024 10:07

மன்மோகன் சிங்க் அரசு காலத்தில் பம்பாயில் அத்துமீறி நுழைந்து பல நூறு அப்பாவிகளை சுட்டதும் தவறுதான்.


A1Suresh
மே 29, 2024 10:06

காஷ்மீரின் முசாபராபாத், கில்ஜிட்-பல்டிஸ்தான் என்று எதையுமே தன்னுடைய அரசியலமைப்பில் பாகிஸ்தான் சேர்த்துக் கொள்ளவில்லை. மேலும் இந்த பகுதிகளின் பிரதிநிதிகளாக யாரையுமே தனது பாராளுமன்றத்திலும் இடம் தரவில்லை. மாறாக நமது பாரதத்தின் பகுதிகளாக அரசியலமைப்பிலும் உண்டு. இன்றுவரை சட்டமன்ற பாராளுமன்ற இடங்களை காலியாகவும் நாம் வைத்திருக்கிறோம்


A1Suresh
மே 29, 2024 10:03

பாகிஸ்தான் பிரிவினை மட்டுமா? பஞ்சாப்பில் காலிஸ்தான், தமிழகத்தில் திராவிடநாடு என்று பிரிவினையை ஏற்படுத்தியதே ஆங்கிலேய அரசும் அதற்காக ஆராய்ச்சி என்ற பெயரில் சர்ச்சு பாதர்கள் எழுதிய புத்தகங்களுமே


veeramani
மே 29, 2024 08:50

பாகிஸ்தானின் திரு நவாஸ் செரீப் .. உங்களின் ஆட்சி நடக்கையில்தான் பர்வேஸ் முஷாரப் என்ற ஒரு தீவிரவாதி பின்னல் ப்ரெசிடெண்ட், இந்தியாவின் கார்கில் பகுதியில் அத்துமீறி நுழைந்து பல இந்திய ஜவான்களை கொன்றான். அவர்களின் குடுபத்திற்கு எவர் பதில் சொல்ல இயலும். இன்று நீங்கள் வடிக்கும் கண்ணீர் பயனற்றது. முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் கில்ஜித், பைடிஸ்தான் விட்டு வெளியேறுங்கள், ஆகாஷ் சீன பகுதியை எப்படி மீட்பது என்று இந்தியாவிற்கு தெரியும். பின்னர் நட்புறவுக்கு வாருங்கள். அதுவரை தொடர்பு வேண்டாம், கிரிக்கெட் வேண்டாம். எதுவும் வேண்டாம்


Kasimani Baskaran
மே 29, 2024 05:50

நேரு ஜின்னா சகோதரர்களுக்கிடையிலான அதிகாரப்பசியை பயன்படுத்தி இந்திய நிலப்பரப்பை துண்டாடுவதிலேயே அன்றைய ஆக்கிரமிப்பாளர்களாக இருந்த வெள்ளைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள். அதன் தொடர்ச்சிதான் இது.


மேலும் செய்திகள்