உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் கொட்டுது கனமழை: 200 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கொட்டுது கனமழை: 200 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.கடந்த சில தினங்களாக ஆப்கானிஸ்தானில் காபூல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5n8uhq5m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என இயற்கை பேரிடர் மேலாண்மையின் மாகாண இயக்குனர் ஹம்தார்ட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சின்னா
மே 11, 2024 15:38

என்னா பொழிஞ்சி என்னா பிரயோஜனம்? துப்பாக்கியை விதைச்சுட்டு நாலு துப்பாக்கி காய்க்குதான்னு பாப்பாங்க.


Sampath Kumar
மே 11, 2024 11:30

மழை பெய்ய வேண்டிய இடத்தில விட்டு ஏங்கோ பைக்விதை பார்த்தால் சொல்லை வாங்கல் எல்லாம் பாலை வனமாக மாறப்போகிறது போல அப்போ சொல்லவந்த சொந்தக்காரன் என்னஒரு பெருந்தன்மை


ஆரூர் ரங்
மே 11, 2024 11:09

மழையிலிருந்து காக்க எல்லோருக்கும் ( ஆண்கள் உட்பட ) விலையில்லா ரப்பர் புர்கா அல்லது ஹிஜாப் தரலாம்.


Srinivasan Krishnamoorthi
மே 11, 2024 10:57

நாட்டின் அரசுகள் வருதாங்களாக இயற்கை முறையில் இல்லாமல் இருப்பதால் இயற்கை சீற்றம் அதை வெளிப்படுத்துகிறது ஒரு நாட்டில் மழை வெயில் காற்று பூமி மற்றும் வான்வெளி ஆளும் அரசின் தன்மைக்கேற்ப இருக்கும்


NicoleThomson
மே 11, 2024 10:22

இயற்கை இவர்களுக்கு துணையிருக்கட்டம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி