உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை

எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவால் பாதிப்பு தான் ஏற்படும்' என்று ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றது முதல் டிரம்ப், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகளை தடுக்கத் தவறியதற்காகவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தாதற்கும், மெக்சிகோ, கனடா மீது தலா 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரியையும் விதித்தார். இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது 25 சதவீத வரிகளை கனடா விதித்தது. அதேபோல, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவால், அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக கனடாவும், மெக்ஸிகோவும் தான் உள்ளன. காரணம், அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதமும், அமெரிக்க அலுமினிய இறக்குமதியில் மெக்சிகோவும் தான் அதிக பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை தொடுத்தால், அனைத்தையும் இழக்க நேரிடும் என்று ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; நாம் உலகளாவிய பொருளாதாரத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. வரி இல்லாத வர்த்தகத்தின் மூலம், அனைத்து நாடுகளும் பயனடைய முடியும். வரிகளை சுமத்தி வர்த்தகப் போரில் ஈடுபட்டால், அனைத்தையும் இழக்க நேரிடும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை