உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய விமானங்களை இயக்கும் திறன் எங்களிடம் இல்லை: மாலத்தீவு "ஜகா"

இந்திய விமானங்களை இயக்கும் திறன் எங்களிடம் இல்லை: மாலத்தீவு "ஜகா"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: 'மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை' என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காசன் மவுமூன் தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபராக முஹமது முய்சு உள்ளார். சீன ஆதரவாளரான அவர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதற்காக முகாமிட்டிருந்த இந்திய படைகளை வெளியேறும்படி அவர் கூறினார். அதன்படி, ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்நிலையில், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காசன் மவுமூன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்திய விமானங்கள்

மேலும் அவர் கூறியதாவது: சில வீரர்கள் இந்திய விமானத்தை இயக்கும் பயிற்சியைத் தொடங்கி இருந்தனர். இருப்பினும், அவர்கள் பயிற்சியில் பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் நமது வீரர்களால் அதை முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய விமானங்களை இயக்கும் லைசென்ஸ் மாலத்தீவு ராணுவத்தில் யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Maharaja
மே 14, 2024 17:50

நமது ராணுவ வீரர்ககளை வெளியேற்றிய மாலதீவுக்கு நாம் சுற்றுலா செல்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் இதுவே நமது தேசபற்றை உலகிற்கு பறைசாற்றும்??


கண்ணன்
மே 14, 2024 06:35

ஏன், சீனா மற்றும் பாகிஸ்தானின் உதவிகளை ஒரு டெலிபோன் செய்து பெற்றிருக்கலாமே!


Kasimani Baskaran
மே 13, 2024 15:33

ஓசியில் ஓட்டியிருக்கிறார்கள்


Lion Drsekar
மே 13, 2024 14:52

அப்படியாவது இந்திய விமானத்தை அங்கு வைத்துவிட்டு வருவதற்கு என்ன காரணம்? கச்ச தீவு போல் கொடுத்ததை எடுத்துவருவதற்கு என்ன தயக்கம் ? வந்தே மாதரம்


rama adhavan
மே 14, 2024 02:42

நீங்கள் மால தீவிடம் கேட்கலாம் அது ஒரு கேடு கெட்ட இருனூறு கீமீ அவ்வளவே உள்ள நாடு நமது ஊராட்சி அளவே உள்ள நாடு இந்திய சுற்றுலா தான் வருமானம் மக்கள் தொகை ஐந்து லட்சம் மட்டும்


Indhuindian
மே 13, 2024 14:40

திருப்பி ஒட்டிக்கிட்டு வந்துடுங்க


Srinivasan Krishnamoorthi
மே 13, 2024 14:12

புஸ்வாணம் கொஞ்சம் சீறும் பின் அடங்கி விடும், தரையோடு சுவடுகள் கூட கலைந்து விடும்


Kumar Kumzi
மே 13, 2024 13:50

துரோகி நாட்டுக்கு இந்தியா வழங்கிய அணைத்து உபகரணங்களும் திரும்ப பெற வேண்டும்


chennai sivakumar
மே 13, 2024 13:45

ஜப்தி செய்வது போல முதலில் இந்திய விமானங்களை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் அவனுங்க எக்கேடு கெட்டுபோகட்டும்


rama adhavan
மே 14, 2024 02:48

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ராணுவம் திரும்பி வரும் போது அங்கிருந்த அனைத்து ராணுவ விமானங்களையும் அமெரிக்கா அழித்து விட்டு செயல் அற்றது ஆக்கி விட்டு தான் வந்தது அது போல் நாமும் செய்து இருக்க வேண்டும்


V SURESH
மே 13, 2024 13:43

இந்தியா வீரர்களை மட்டும் திருப்பி அனுப்ப தெரியும்


ديفيد رافائيل
மே 13, 2024 13:29

நான் Aircraft Maintenance Engineering தான் படித்து இருக்கேன் Avionics பிரிவில் licence பெறுவது என்பது ரொம்ப ரொம்ப கடினம் தான் DGCA licence ஒவ்வொருpaper clear பண்றதுக்குள் ஒரு வழிஆகிடும் நான் Mechanical பிரிவு, எனக்கும் licence இருக்கு but இந்தளவு கஷ்டம் கிடையாது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி