உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்: புடினை சந்தித்த பின் பிரதமர் மோடி பேச்சு

பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்: புடினை சந்தித்த பின் பிரதமர் மோடி பேச்சு

மாஸ்கோ: 'பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்' என ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய பின், பிரதமர் மோடி தெரிவித்தார்.ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு புடின் வாழ்த்து தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xobijy51&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: மகத்தான வரவேற்பு அளித்தமைக்கு அதிபர் புடினுக்கு நன்றி. 40 ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதத்தை சந்தித்து வருகிறது. அதன் வலி என்னவென்பது தெரியும். பயங்கரவாதத்தை இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம். 22 ஆண்டுகளில் 22 சந்திப்புகள் நடந்துள்ளன. 10 ஆண்டுகளில் 17 முறை புடினை சந்தித்துள்ளேன். அடிக்கடி நடைபெறும் சந்திப்புகள் உறவின் ஆழத்தை பிரதிபலிக்கிறது.

உறவு

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவு ஆழமானது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடையும். பயங்கரவாதத்திற்கு எதிராக, ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு புடின் வாழ்த்தியதற்கு நன்றி. நல்ல நண்பர்களான நாம் இருவரும் நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.

எரிபொருள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகம் பல சவால்களை எதிர்கொண்டது. அப்போதும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உறவு வலுவானதாக இருந்தது. பல நாடுகள் உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, எங்கள் விவசாயிகள் பிரச்னையை எதிர்கொள்ள நாங்கள் அனுமதிக்கவில்லை. ரஷ்யாவுடனான உறவுகள் அதில் பங்கு வகித்தன. ரஷ்யாவின் ஒத்துழைப்பால் இந்தியாவில் உள்ள சாதாரண குடிமக்களுக்கும் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜூலை 09, 2024 19:35

நேத்திக்கி உக்ரைனில் தாக்குதல் நடத்தி 41 அப்பாவி மக்ளை கொன்ற பயங்கரவாதம் புடின் வடிவில் இருக்கு.


Sakthi,sivagangai
ஜூலை 09, 2024 20:51

பல்லு போனாலும் உனக்கு இந்த எகத்தாளம் போக வில்லை வயசான காலத்தில் வம்பு பேசாமல் ஒழுங்கா அதி காலையில் வரிசையில் நின்னு பால் பாக்கெட் வாங்கி கொடு இல்லாட்டி ஒனக்கு பூவா கிடையாது.


இந்திய நாட்டிற்கு முதலில் நீ நல்லது செய், பிறகு பயங்கரவாதத்தை பற்றி நீ பேசலாம்
ஜூலை 09, 2024 19:19

பயங்கரவாதத்தை விட, நாட்டு மக்களின் காசை நீ செலவழிப்பது தான் மிகவும் பயங்கரவாதம்


Gopal,Sendurai
ஜூலை 09, 2024 20:53

யோவ் ஏன்யா இந்த நேரத்தில் திடீர்னு விடியல் அரசை ஞாபகப் படுத்துற?


இந்தியாவைவிற்கும் கூமுட்டைகளை
ஜூலை 09, 2024 19:12

இதுக்கு முன்னாடி என்ன கண்ணா தெரியலை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை