மேலும் செய்திகள்
இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி
15-Aug-2024
சர்வதேச விண்வெளி மையம்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஓட்டுபோட திட்டமிட்டுள்ளதாக, விண்வெளி மையத்தில் தங்கியுள்ள நாசா விஞ்ஞானிகளான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தெரிவித்துள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. அதில் ஓட்டு போட நாங்கள் இருவரும் திட்டமிட்டுள்ளோம். எங்கள் ஜனநாயக கடமையை நிலைநாட்டுவோம்.இவ்வாறு தெரிவித்தனர்.இதற்கு முன்னர் நசா விஞ்ஞானிகளான கேத்தே ரூபின்ஸ் மற்றும் டேவிட் உல்ப் ஆகியோர் விண்வெளியில் இருந்து ஓட்டு போட்டுள்ளனர். இதில் முதன் முதலில் விண்வெளி நிலையத்திலிருந்து (1997) அதிபர் தேர்தலில் ஓட்டு போட்டவர் டேவிட் உல்ப் தான். அதன் பிறகு 2020ல் கேத்தே ரூபின்ஸ் ஓட்டு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
15-Aug-2024