உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வரதட்சணையாக 100 புனுகு பூனைகள்

வரதட்சணையாக 100 புனுகு பூனைகள்

ஹானோய் : வியட்நாமில் மகளுக்கு தங்கம், வைர நகைகள், ரொக்கம் ஆகியவற்றுடன் 100 புனுகு பூனைகளையும் பெற்றோர் வரதட்சணையாக வழங்கியுள்ளனர். புனுகு பூனைகள் 'காபி லுவாக்' எனப்படும் விலை உயர்ந்த காபி கொட்டைகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஹாங் சி தாம். இவர் தன் 22 வயது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடத்தி வைத்தார். மகளுக்கு வரதட்சணையாக 25 தங்க கட்டிகள், 30 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் நிறுவன பங்குகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.அத்துடன் 100 புனுகு பூனைகளையும் வரதட்சணையாக தந்தார். அதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய். இவை விலை உயர்ந்த காபி லுவாக் எனப்படும் காபி கொட்டைகள் தயாரிப்பில் பங்கு வகிக்கின்றன.காபி செடியின் பழுத்த காபி செர்ரி பழங்கள் புனுகு பூனைக்கு வழங்கப்படும். புனுகு பூனையின் வயிற்றில் இவை ஓரளவு செரிமானம் ஆகும். அதன் வயிற்றில் உள்ள நொதிகள் காபி கொட்டையின் புரதங்களை உடைத்து, காபிக்கு தனித்துவமான சுவையையும், குறைந்த கசப்பையும் அளிக்கிறது.செரிமானம் ஆகாத காபி கொட்டைகள், புனுகு பூனையின் கழிவுடன் வெளியேறும். அதிலிருந்து காபி கொட்டைகளை சேகரித்து நன்கு சுத்தம் செய்து, உலர்த்தி, வறுத்து காபி லுவாக் பொடி தயாரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 17:06

புனு கக்கா பூனை?


Anantharaman Srinivasan
ஜூன் 11, 2025 11:17

பேஷ் பேஷ்


Ram pollachi
ஜூன் 11, 2025 11:12

இனி யாரும் காபி குடிக்க மாட்டார்கள்... இந்த பூனையின் உதவியால் வாசனை திரவியம் தயாரிப்பதாக தகவல் உள்ளது... அரிசி உடன் உருட்டு உளுந்தையும் கலந்து கொடுத்தால் சூடான சுவையான புனுகு இட்டிலி தயார்.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 11, 2025 10:25

நம் நாட்டில் ரசாயனம்


N Annamalai
ஜூன் 11, 2025 10:16

நம்ம ஊரில் இடத்தி ஏன் செய்ய வில்லை? காபி உற்பத்தியாளர்கள் யோசிக்கலாம் .புனுகு பூனை பண்ணை ஆரம்பிக்கலாம் .ஈ மு கோழி போல் ?.


AKM KV SENTHIL MUSCAT
ஜூன் 11, 2025 09:27

kitchen ல என்னப்பா பண்ற மணி 7 ஆகுது இன்னும் காபி வரல..... இருங்க பூனை இன்னும் புழுக்கை போடல .... அது போட்டாத்தான் காபி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க


visu
ஜூன் 11, 2025 08:14

ஆக இந்த பூனையி காக்காவிலிருந்து காபி கொட்டைகளை பொருக்கி எடுத்து காஃபீ தயாரித்து அதை அதிக விலைக்கு விற்க்குறாங்க என்னதான் சுவை நல்லா இருக்கும்னாலும் அதுக்காக இப்படியா


Venkatesan Srinivasan
ஜூன் 11, 2025 15:58

"அனிமல் பார்ச்மெண்ட்"என்ற வகையில் காபி கொட்டைகள் இவ்வாறு நரிகள் கழிவு மூலம் பெறப்படும். இவை மிகுந்த விலை உயர்ந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை