உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது

அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள வால்மார்ட் கடையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் வடக்கு மிச்சிகனில் உள்ள டிராவர்ஸ் நகரில், வால்மார்ட் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியில் குத்தினார். இந்த சம்பவத்தில், 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர் ஏதேனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், வெளிநாட்டு அவர்களுக்கு எதிராக இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.''இந்த மிருகத்தனமான வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

m.arunachalam
ஜூலை 27, 2025 16:21

வளர்ந்த நாடுகளின் வாழ்க்கை முறை உற்பத்தி செய்யும் விபரீதங்கள் இவை . உறவுமுறை , பழக்கவழக்கங்கள் , எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயமாக்கி சுரண்டும் அமைப்பு, மனிதத்தன்மையில் இருந்து வெகுதூரம் விலகிவிட்ட நிலை . இதை நம்நாட்டில் பெரியநகரங்களிலும் பார்க்கலாம் .


Ramesh Sargam
ஜூலை 27, 2025 12:34

முன்பெல்லாம் துப்பாக்கி சூடு. இப்ப துப்பாக்கி பற்றாக்குறை போல தெரிகிறது. ஆகையால் கத்தியால் குத்திக்கொண்டு சாகிறார்கள். எங்கே நம்ம நோபல் பரிசு எதிர்பார்க்கும் அண்ணன் ட்ரம்ப்? ஓ, தாய்லாந்து - கம்போடியா போரை நிறுத்த கிளம்பிட்டாரா?


பேசும் தமிழன்
ஜூலை 27, 2025 12:21

இங்கேயும் எங்கள் ஊரில்.. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்தார் என்று ஒரு மர்ம நபரை கைது செய்து இருக்கிறார்கள் .....அவனுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை போல் தெரிகிறது.


பேசும் தமிழன்
ஜூலை 27, 2025 12:19

வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி இருக்கும் மார்க்க ஆட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..... எங்கே இருந்தாலும் அவர்கள் வேலையை காட்டி விடுவார்கள்.


Kasimani Baskaran
ஜூலை 27, 2025 10:59

இதற்க்கெல்லாம் டிரம்ப் சமரசம் செய்து வைக்க மாட்டார் போல..


Sathyan
ஜூலை 27, 2025 14:06

அதிபர் டிரம்ப் இலக்கு நோபல் அமைதி விருது ஒன்றே எப்படியும் பெற்றுவிடுவார் பாருங்கள்


Iniyan
ஜூலை 27, 2025 10:48

மர்ம நபர் வேலைதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை