உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாஷிங்டனில் அதிபர் டிரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை

வாஷிங்டனில் அதிபர் டிரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கையில் 'பிட்காயின்' என்ற 'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பார்லிமென்டுக்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் கையில் பிட்காயின் ஏந்தியபடி இருக்கும் டிரம்பின் 12 அடி உயர பொன்நிற சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது. அறிவிப்பு வந்த அதே நேரத்தில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சிலைக்கு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக அதிபர் டிரம்ப் ஆதரவு வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதி சந்தைகளில் அரசின் பங்களிப்பு குறித்த விவாதத்தை துாண்டும் நோக்கத்துடன் இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ramesh Sargam
செப் 19, 2025 13:15

பாருங்கள் அமெரிக்காவிலும் எங்களது திராவிட மாடல். உலகத்துக்கே வழிகாட்டி திமுகதான் என்று ஸ்டாலின் பெருமை பேசுவார்.


Raghavan
செப் 19, 2025 12:04

தமிழக கலாச்சாரம் அங்கேயுமா? நாடு உறுப்பிடாமாதிரிதான். டோப்பா தலையன் விழாவுக்கு சென்று அதன் அருகில் கலைஞர் அவர்களுக்கும் ஒரு சிலை தமிழர்கள் சார்பாக வைப்பதற்கு ட்ரும்பிடம் வேண்டுகோள் வைத்ததாகவும் அதற்க்கு அவர் பரிசீலிக்கிறேன் என்று சொன்னதாகவும் ஒரு பெரிய புருடா விடுவான் அதையும் இங்குள்ள உப்பீஸ் கேட்டு ஒரு பெரிய ஆரவாரம் செய்யும்.


Senthoora
செப் 19, 2025 13:01

எங்களுக்கு, புருடா விட தெரியுமுங்க


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 19, 2025 11:42

சிலை திறப்பு விழாவுக்கு போவாருங்களா?


Senthoora
செப் 19, 2025 13:04

ஆமா


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2025 10:07

திரா விட கலாச்சாரம் .........


தியாகு
செப் 19, 2025 10:01

இதுவே கட்டுமர திருட்டு திமுகவாக இருந்தால் உண்மையிலேயே முழு தங்கத்தை பயன்படுத்தி சிலை செய்ததாக பொய் கணக்கு எழுதி ஒரு இருபது கோடிகளையாவது ஊழல் மூலம் ஆட்டையை போட்டிருப்பானுங்க. விவரம் தெரியாத அமெரிக்காகாரனுங்க கட்டுமர பட்டறையில் பாடம் படிக்கவேண்டும்.


Vasan
செப் 19, 2025 09:58

திரு டிரம்ப் அவர்களுக்கு மெரினா கடற்கரையில், பேனாவிற்கு பக்கத்தில் ஒன்றும், கருப்பு கண்ணாடிக்கு பக்கத்தில் ஒன்றுமாக, இரண்டு முழு உருவ சிலை வைக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


sankaranarayanan
செப் 19, 2025 08:29

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பார்லிமென்டுக்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் கையில் பிட்காயின் ஏந்தியபடி இருக்கும் டிரம்பின் 12 அடி உயர பொன்நிற சிலை நிறுவப்பட்டுள்ளது பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சம்மதம் இல்லாமலே இச்சிலை எப்படி திறக்கப்பட்டது விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கப்படும் இந்த சிலை விரைவில் அகற்றப்படும் திராவிட மாடல் அரசின் சித்தாந்தம் மூலைக்கு மூலை சிலை வைப்பது அங்கேயும் சென்றுவிட்டதா அந்தோ பரிதாபம்


VSMani
செப் 19, 2025 09:34

திராவிட மாடல் அரசின் சித்தாந்தம் மூலைக்கு மூலை சிலை வைப்பது உலகெங்கும் சென்றுவிட்டது அந்தோ பரிதாபம்


பிரேம்ஜி
செப் 19, 2025 08:24

தலைவர்களுக்கு சிலை வைப்பது திராவிட கலாச்சாரம்! அது உலகம் முழுவதும் பரவி வருவது இந்தியாவுக்கு பெருமை தரும் விஷயம்!


Balaa
செப் 19, 2025 08:23

பாருங்க, நம்ம முதல்வர் கடந்த வருடம் அமெரிக்க பயணத்துக்கு பின் ட்ரம்ப் எப்படி மாறிவிட்டார். உலகுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் முதல்வர்


Balaa
செப் 19, 2025 08:20

ட்ரம்ப் மாடலா இல்லை திராவிட மாடலா.....


முக்கிய வீடியோ