உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கன் படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 58 பேர் பலி

ஆப்கன் படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 58 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. ஆப்கன் நடத்திய தாக்குதலில் பாக் ராணுவ வீரர்கள் 58 பேர் பலியாகினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vu6hhhpe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நம் அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் மற்றொரு பக்கம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில், ஆப்கனின் டி.டி.பி., அமைப்பு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய வான்வழி தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தலிபான் படைகள் தாக்குதல் நடத்தினர். துராந்த் எல்லை பகுதியில் தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் நடந்தது பற்றி ஆப்கன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.ஆப்கன் தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் கூறுகையில், ''ஆப்கன் ராணுவத்தினரின் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 58 பேர் கொல்லப்பட்டவர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கன் தரப்பில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 14 வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 20 சோதனை சாவடிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஆப்கன் ராணுவத்தின் தாக்குதல் கத்தார் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் வேண்டுகோளை ஏற்று நிறுத்தப்பட்டு உள்ளது, என்றார்.இது குறித்து தலிபான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எனாயத் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக நள்ளிரவில் வெற்றிக்கரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. மீண்டும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறினால், எங்கள் பாதுகாப்பு படைகள் தங்கள் நாட்டை பாதுகாக்கத் தயாராக உள்ளன. மேலும் தக்க பதிலடி கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த மோதல்களின் போது பாகிஸ்தான் ஆயதங்கள் அழிக்கப்பட்டது என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சந்திரசேகர்
அக் 12, 2025 15:59

.கத்தார் மற்றும் சவுதி அரேபியா வேண்டுகோளை ஏற்று ஆப்கானிஸ்தான் தாக்குதலை நிறுத்தி இருக்கிறது. ஆமாம் பாகிஸ்தான் சவுதி அரேபியா ஒப்பந்தம் என்ன ஆனது. ஆக சவுதி அரேபியா பாகிஸ்தானுக்காக களம் இறங்கும் என்று நம்புவோமாக.


rajasekaran
அக் 12, 2025 12:59

இரண்டு அமைதி மார்க்கமும் அடித்து கொள்கிறார்கள். கேட்டால் மற்றவர்களுக்கு உபேதேசம் செய்வார்கள்.


திருட்டு திமுக கைக்கூலி கொத்தடிமை
அக் 12, 2025 12:00

அருமையான சம்பவம்.‌ மேலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உறுதுணையாக இருந்து பாக்கிஸ்தானை ஒரு கை பார்க்க வேண்டும். மேலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சுதர்சன சக்கரத்தை வழங்கி அணு ஆயுதங்களை வழங்கி இந்தியாவும் ஆப்கானிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நல்லசகோதரர்களுக்கு என்றும் இந்தியா உறுதுணையாக இருக்கும்.


தமிழ்வேள்
அக் 12, 2025 14:43

ஆப்கானிஸ்தானுக்கு நாம் ஆயுதங்கள் தர தேவையில்லை.. அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் போதுமானது.. நமது ஆயுதங்கள் அவர்களிடம் போனால் பின்னொரு காலத்தில் நம்மையே தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது..


Ravi
அக் 12, 2025 11:40

உடை விழுந்தால் அது எனக்கு விழுந்த மாதிரி என்வே நானும் உடை வாங்க வருவேன் என்று கையெழுத்து போட்டு கொடுத்தானே அவர் சவுதிவந்தானா?


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2025 11:27

கைபர் கணவாயில் இருபிரிவு முஸ்லிம்களின் போராட்டம் . இங்கிருக்கும் முஸ்லிம்களோ கைபர் வழியாக அங்கிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று பிதற்றல்


Rathna
அக் 12, 2025 11:09

1940 களில் ஆப்கானிஸ்தான் காபூல் பாகிஸ்தானில் கராச்சி, லாஹூர், இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் தீபாவளி, கராச்சியில் தமிழர்கள் பொங்கல், ஆடியில் மாரியம்மனுக்கு திருவிழா ஆகியவை நடந்தது. ஆனால் இன அழிப்பின் மூலம் அந்த மக்கள் துடைத்து எறியப்பட்டனர். எதிரிக்கு எதிரி அடித்து கொண்டு சாவதில் நமக்கு நன்மையே.


ரவி
அக் 12, 2025 10:28

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தாக்குதலை கண்டித்து சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், அமீர் போராட்டம் எங்கே? எப்போ?


thiazide oviyan. Ajax Ontario
அக் 12, 2025 09:33

vidiyal will conveen a special assembly session and condemn afghan govt. like Gaza, all allakaigal will make a kandana koottam


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 12, 2025 09:14

ஆக விடியலின் பயணம் தொடர வாழ்த்தி கட்டுரை வராது


SENTHIL NATHAN
அக் 12, 2025 08:41

காசாவுக்கு கதரண கலுதைக இப்ப பொருக்கிஸ்தான் நடக்கறத பார்த்து என்ன சொல்ல போறாக


முக்கிய வீடியோ