உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஊழியர் பற்றாக்குறை: அமெரிக்காவில் 1,200 விமானங்கள் ரத்து

ஊழியர் பற்றாக்குறை: அமெரிக்காவில் 1,200 விமானங்கள் ரத்து

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ., எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.அமெரிக்க பார்லிமென்ட்டில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காத காரணத்தால், அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் இடையூறுகளை சந்தித்து வருகிறது.வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை அமெரிக்காவில் 1,200 விமானங்கள் ரத்துபாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்துத்துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், சம்பளமில்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களில் பலர் உடல் நிலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்துள்ளனர்.இதையடுத்து, போதிய பணியாளர்கள் இல்லாததால், விமான போக்குவரத்தை ஆணையத்தால் பாதுகாப்பாக கையாள முடியவில்லை.இதையடுத்து ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்களின் விமான இயக்கத்தை குறைத்ததையடுத்து, 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன.அட்லாண்டா, டென்வர், நியூவார்க், சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 40 முக்கிய விமான நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.பணியாளர் பற்றாக்குறையால், 40 முக்கிய விமான நிலையங்களில் 4 சதவீத விமானங்களை குறைக்குமாறு உத்தரவிடப்பட்டது.இந்த நிலை தொடர்ந்தால் 20 சதவீதம் வரை விமானங்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

arunachalam
நவ 09, 2025 10:07

அடடா இப்ப பறந்து போய் என்ன பண்ண போறீங்க? டிரம்ப் அவர் குடும்பத்துக்கும், வியாபாரத்துக்கும் ஒரு வழி செய்யட்டும். அதுவரை பொறுத்திருங்கள்.


VENKATASUBRAMANIAN
நவ 09, 2025 08:18

இதுமாதிரி ஆட்களை தேர்ந்தெடுத்தால் என்ன நிலைமை என்று அமெரிக்காவும் தமிழகமும் உணரவேண்டும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


VENKATASUBRAMANIAN
நவ 09, 2025 08:17

இது உலகிற்கு நல்லதல்ல.


சாமானியன்
நவ 09, 2025 07:04

அமெரிக்காவில் தைரியமா Shutdown announce பண்ணிட்டாங்க. எப்ப எடுப்பாங்க தெரியாது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத shutdown நடைமுறையில் உள்ளது. எந்த scheme க்கும் நிதி இல்லையாம். அரசு ஊழியர்கள் சம்பளம் ஒன்றாம் தேதி கிடைக்குமா என கவலையா இருக்காங்க.


Ramesh Sargam
நவ 09, 2025 07:04

140 கோடி மக்கள் தொகை இருக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கூட இதுபோன்ற பிரச்சினைகள் இருந்ததில்லை. இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இன்றைய அளவில் உலகின் அதிகமான மக்கள்தொகை இன்று இந்தியாவில்தான். அப்படி இருந்தும் மோடியின் கீழ் செயல்படும் மத்திய அரசு எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. நாம் எல்லாம் நினைத்தோம், ஆஹா அமேரிக்கா, எவ்வளவு அற்புதமான வளர்ந்த நாடு, பணக்கார நாடு என்று. இந்த செய்தியை படித்தபிறகாவது இந்தியாவை குறைகூறும் ராகுல் காந்தி போன்றவர்கள் தலைகுனிந்து, வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வந்தே மாதரம்.


Kasimani Baskaran
நவ 09, 2025 06:32

அரசுக்கு ஓசியில் வேலை பார்க்க பலர் தயாரில்லை என்பதுதான் கசக்கும் உண்மை. கடன் உச்சவரம்பை அதிகரிக்கவில்லை என்றால் பொருளாதாரம் விரைவில் குப்பைக்கு போய்விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை