பாக்.,கில் தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
இஸ்லாமாபாத்:நம் அண்டை நாடான பாகிஸ்தானின் விமானப்படை, சமீபத்தில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் தெஹ்ரீக் - இ -- தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் மறைவிடங்களை குறிவைத்து நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வடமேற்கு கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் ரட்டா குலாச்சி போலீஸ் பயிற்சி பள்ளியில் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் சிலர் புகுந்து, திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். ஒருகட்டத்தில், பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போலீஸ் பயிற்சி பள்ளியின் நுழைவாயிலில் மோதியதில், அது பயங்கர சத்தத்துடன் அது வெடித்து சிதறியது. இந்த தற்கொலை படை தாக்குதலில் ஏழு போலீசார் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.