உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா விமானத்தில் தீ தப்பி பிழைத்த 173 பயணியர்

அமெரிக்கா விமானத்தில் தீ தப்பி பிழைத்த 173 பயணியர்

டென்வர்:அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டபோது, சக்கரத்தின் கியர் திடீரென தீப்பற்றியது. இதனால் அலறியடித்த 173 பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் இருந்து மியாமிக்கு, 173 பயணியருடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை புறப்பட்டது. ஓ டுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, விமான சக்கரத்தின் கியர் செயல்படாத நிலையில், திடீரென டயரில் தீப்பிடித்து எரிந்தது; தொடர்ந்து புகையும் வெளியேறியதால் பயணியர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது. அவசரவழி வழியே சறுக்கியபடி ஓடி பயணியர் அனைவரும் உயிர் தப்பினர். இதில், ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையில் தவித்தபடி நின்ற பயணியர், பஸ் வாயிலா க விமான முனையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, அந்த நாட்டின் மத்திய விமான போக்குவரத்து நிறுவனம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் டயர் தீப்பிடிப்பதும், முன்பக்க அவசர வழி வாயிலாக பயணியர் சறுக்கியபடி வந்து உயிர் தப்பும் காட்சியும் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை