உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் அமைச்சர்களான 2 இந்திய வம்சாவளியினர்

பிரிட்டன் அமைச்சர்களான 2 இந்திய வம்சாவளியினர்

லண்டன்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண், 36, மற்றும் லிசா நந்தி, 46,பிரிட்டனின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ஹம் ஜூலை 20 பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய அமைச்சரவையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண், லிசா நந்தி ஆகிய இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பீஹாரின் முசாபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாராயண், தன் 12வது வயதில் பிரிட்டனின் கார்டிப் நகருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார படிப்பு முடித்தவர். இவர் பிரிட்டனின் முதல், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முந்தைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் கலாசாரத் துறை அமைச்சராக பணியாற்றிய லிசா நந்தி, புதிய அமைச்சரவையிலும் அதே பொறுப்பில் நீடிக்கிறார். மான்செஸ்டரில் பிறந்த லிசா நந்தியின் தந்தை தீபக் நந்தி, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவைச் சேர்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை