மேலும் செய்திகள்
முருகன் திருக்கல்யாணம்
17-Nov-2026
-நமது நிருபர்-கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், வால்மார்ட் கடைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த 23 வயதான ககன்பிரீத் மற்றும் 24 வயதான சுக்ஜீத் கவுர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிர் இழந்தனர்.இது திட்டமிட்ட தாக்குதல், குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சிறிது தூரத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கார், சந்தேக நபர்களின் வாகனமாக இருக்கலாம் என விசாரணை நடக்கிறது.
17-Nov-2026