உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

கனடாவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் நடந்த தாக்குதலில் பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கனடாவின் தென்கிழக்கு எட்மண்டனில், பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்கள், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் பஞ்சாபின் மான்சாவில் உள்ள உத்தத் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் ரன்வீர் சிங் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தொழில் வாய்ப்புகளைத் தேடி இரண்டு இளைஞர்களும் தனித்தனியாக கனடாவுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் அங்கு வேலை தேடி வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. எட்மண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். கனடா போலீசார் வேறு சில பஞ்சாப் இளைஞர்களை சுற்றி வளைத்து இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

jkrish
டிச 14, 2025 19:40

ஓம் ஷாந்தி.


Ramesh Sargam
டிச 14, 2025 19:36

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இனி இந்தியர்கள் வாழத்தகுதி அற்ற நாடுகள் ஆகிவிட்டன.


raja
டிச 14, 2025 19:01

ஆழ்ந்த இரங்கல்


முக்கிய வீடியோ