உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, பதற்றம் நீடிப்பு

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, பதற்றம் நீடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; ஆர்கன்சஸ் பகுதியில் லிட்டில் ராக் அருகில் மிக பெரிய பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவின் பரப்பளவு 10 ஏக்கர். பூங்காவில் பெரிய விளையாட்டு மைதானம், கூடைப்பந்து ஆடுகளம் உள்ளது. பூங்காவில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான பேர் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் கண்காணிப்பில் காயம்பட்டவர்கள் நலமாக உள்ளனர்.துப்பாக்கிச்சூடு எதனால் நடைபெற்றது? யார் துப்பாக்கியால் சுட்டது போன்ற விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். முதல்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், முழு விவரங்கள் பின்னரே தெரிய வரும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ