மேலும் செய்திகள்
அ.ம.மு.க., பொறுப்பாளர் நியமனம்
09-Aug-2025
போர்ட் பிளேர்: மியான்மரை சேர்ந்த வேட்டைக்காரர்கள் 22 பேரை அந்தமான் வனப் பகுதியில் போலீசார் கைது செய்தனர். அந்தமான் யூனியன் பிரதேசத்தின் கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய இழுவை படகுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 40 போலீசார் அங்கு விரைந்தனர். அடர்ந்த நப்பி கோப் வனப்பகுதியில் இருந்த வேட்டைக்காரர்களான மியான்மரை சேர்ந்த 14 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். நேற்று மேலும் எட்டு வேட்டைக்காரர்கள் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஸ்வேதா சுகதன் கூறியதாவது: மியான்மரை சேர்ந்த வேட்டைக்காரர்களிடம் இருந்து 550 கிலோ கடல் வெள்ளரி பறிமுதல் செய்யப்பட்டது. அழுகும் பொருட்களையும் அதன் மீது படியும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் கடல் வெள்ளரிகள் கடற்பரப்பை சுத்தமாக வைத்திருக்கின்றன. வெளிநாடுகளில் மிக முக்கிய உணவாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படும் இந்த கடல் வெள்ளரிகள், கடலின் உள்ளே 30 முதல் 60 அடி ஆழத்தில் கிடைப்பதால் இதை பணத்துக்காக திருடி செல்கிறது இந்த கும்பல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
09-Aug-2025