உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ஆதரவு

பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, அவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா, 62, அமெரிக்காவில், 2009-ல் பிடிபட்டான். இவன், பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, கடந்த மே மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவன் சார்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில், பயங்கரவாதி தஹாவூர் ராணா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தை காரணம் காட்டி, இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனையடுத்து கடைசி சட்ட முயற்சியாக, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அமெரிக்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
டிச 19, 2024 21:14

இவ்ளோ நாலு பாஷா வுக்கு சோத்தை போட்டு வளர்த்து விட்டாச்சு இனி ஹெட்லி மற்றும் தஹவூர் , பன்னுன் என்று எல்லாத்துக்கும் போடுங்க


பிரேம்ஜி
டிச 19, 2024 21:13

அசப்பில் நம் நடிகர் திலகம் போலவே இருக்கிறார். நியூஸ் படித்த பின்னர்தான் இவர் ஒரு பயங்கரவாதி என்பது தெரிந்தது!


Saai Sundharamurthy AVK
டிச 19, 2024 20:25

இவனை நாடு கடத்துவதற்கு பதிலாக அமெரிக்கவிலேயே போட்டு தள்ளி விடலாம்.


Sampath Kumar
டிச 19, 2024 20:04

அமெரிக்கா இஸ்ரேலின் பிடியில் உள்ள நாடு இஸ்ரேலின் யாரு ? ஹிட்லரால் அடித்து கொள்ள பட்டவன் ஏன் ? ஏதற்கு ? வரலாறு புரிந்தால் எல்லாம் விளங்கும் ஏனவே இந்த பயங்கர வாதி இங்கே நாடு கடத்தப்படுவதில் பாடுவதில்


Barakat Ali
டிச 19, 2024 18:37

அப்படியே பன்னூன் ஐயும் அனுப்பி வையுங்க ....... நாங்க சாப்பாடு போடுவோம் .....


raja
டிச 19, 2024 17:50

கொண்டு வந்து உடனே தூக்கில் போடுங்கள் நோ விசாரணை நோ தீர்ப்பு... சும்மா கொண்டுவந்து பிரியாணி சோறு போட்டு ஜவ்வு மாதிரி வச்சிகிட்டு பூச்சாண்டி காமிக்க கூடாது...


கத்தரிக்காய் வியாபாரி
டிச 19, 2024 17:33

இவனை இங்கு வைத்து யாரு தாண்ட சோறு போடுவது. அதுபோக இவனின் நலனுக்காக போராட ஒரு கூட்டம் சேரும்.


என்றும் இந்தியன்
டிச 19, 2024 17:28

15 வருடம் கழித்து ஏன்னா ஞானோதயம் அமெரிக்காவிற்கு?????இது போய் ஒசாமா பின் லேடனை இன்னொரு தேசத்தில் கொலை எய்யுமாம் அது தவறில்லை???? அப்படித்தானே அமெரிக்கா????


Kannan
டிச 20, 2024 12:08

பின் லேடனாவது பயங்கரவாதி..ஆனால் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஒரு நாட்டின் அதிபரான சதாம் உசேன் அவர்களையே சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணாக கொன்ற அரக்க நாடு அமெரிக்கா.


முக்கிய வீடியோ