ஆப்கானிஸ்தான் டிரைவர் துாங்கியதால் பஸ் கவிழ்ந்து 26 பேர் பலி
காபூல்:ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பஸ் நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. பஸ் அதிவேகமாக சென்றதும், டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததும் விபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் உருண்டதில் 26 பயணியர் பலியாகினர். மேலும், 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தில், ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 81 பேர் பலியாகினர்.