உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2வது டெஸ்ட்: இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

2வது டெஸ்ட்: இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன் எடுத்தது; ஆஸ்திரேலிய அணி லபுசேன் அரைசதம், ஹெட் சதம் ஆகியவற்றின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. 157 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g5t0oxbt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராகுல் (7), ஜெய்ஸ்வால் (24), சுப்மன் கில் (28), அனுபவ கோலி (11), கேப்டன் ரோகித் (5) சோபிக்கவில்லை. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்திருந்தது. ரிஷாப் பன்ட் (28), நிதிஷ் குமார் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

1-1 என்ற கணக்கில் சமநிலை

இன்று (டிச.,8) 3வது நாள் ஆட்டம் துவங்கிய 6வது பந்தில் ரிஷாப் பன்ட் (28) கேட்சானார். அடுத்து, அஷ்வின் (7), ஹர்ஷித் ராணா (0), நிதிஷ் குமார் (42), முகமது சிராஜ் (7) அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. வெறும் 18 ரன்களே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. 19 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மெக்ஸ்வீனி, கவாஜா துவக்கம் தந்தனர். இருவருமே ஆஸி., வெற்றியை வசமாக்கினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் 14ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sridhar
டிச 08, 2024 13:57

திட்டமிட்டு வேண்டுமென்றே ஸ்டம்ப் நோக்கி பந்து வீசிய ஆசி பௌலர்களை வன்மையாக கண்டிக்கிறேன் .


பாமரன்
டிச 08, 2024 13:16

உடனடியாக ஜெய் ஷாவை கேப்டனாக அறிவிக்கனும்... கிரிக்கெட் அல்லது ஜெனரலாவே அறிவில்லன்னாலும் ரெம்ம்ம்ம்ம்ப உழைச்சு முன்னேறி இப்போ ஒலக கிரிக்கெட் தலீவரா வரலையா? இந்திய அணி எம்மாத்திரம்... இந்த முத்தான ரோஜனையை சொன்னதுக்கு பாராட்டலன்னாலும் திட்டப்பிடாது..


Sambath
டிச 08, 2024 12:48

ஆரிய / திராவிஷம் இதிலுமா?


Narasimhan
டிச 08, 2024 12:15

ரோஹித் கோஹ்லி அஸ்வின் போன்றவர்களை ஏன் இன்னும் அணியில் வைத்துள்ளனர் என்று தெரியில்லை. கிரிக்கெட் வாரியம் ஆரியர்களின் பிடியில் உள்ளதால் இந்தியா சோபிக்க வாய்ப்பில்லை


Kumar Kumzi
டிச 08, 2024 13:08

ஓங்கோல் இளவரசனை போயி விளையாட சொல் பின்னிடுவா


rama adhavan
டிச 08, 2024 20:07

கோஹ்லி ஆரியர் அல்ல. பஞ்சாபி. ஆமாம் இதே ஆரியர்கள் தானே முதல் டெஸ்டில் வென்றார்கள்.


சமீபத்திய செய்தி