உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து 3 இந்தியர்கள் உயிரிழப்பு

மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து 3 இந்தியர்கள் உயிரிழப்பு

பெய்ரா: ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில், படகு கவிழ்ந்த விபத்தில், மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர். ஐந்து பேர் மாயமாகினர். மத்திய மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா துறைமுகத்தில், 14 இந்தியர்கள் உட்பட, 21 பேர் பயணித்த படகு, நங்கூரமிடப்பட்ட ஒரு டேங்கர் கப்பலுக்கு வழக்கமான பணியாளர்களை மாற்றிக்கொண்டிருந்தது. அப்போது எதிர் பாராத விதமாக அந்த படகு கவிழ்ந்தது. அதில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். விபத்தில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர். ஐந்து பேர் மாயமாகினர். ஐந்து இந்தியர்கள் மீட்கப்பட்டனர். உயிர் பிழைத்த ஒருவர் தற்போது பெய்ராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெய்ரா துறைமுகத்தில் நடந்த படகு விபத்தில் மூன்று இந்தியர்கள் உயிர் இழந்ததற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 'இந்த துரதிருஷ்டவசமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்' என, தெரிவித்துள்ளது. படகு விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. காணாமல் போன ஐந்து பேரை கண்டுபிடிக்க உள்ளூர் அதிகாரிகள், கடல்சார் நிறுவனங்கள் மற்றும் இந்திய துாதரக அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட் புப் பணியில் ஈடுபட்டு உ ள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ