உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; 3 பேர் பலி

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ராணுவ தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை கடந்தும், இந்தப் போர் தொடர்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அரசு, ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் சென்று உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷ்யா கடும் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்து வருகிறார். காலக்கெடுவும் விதித்துள்ளார்.ஆனால் அதை பொருட்படுத்தாத ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பதிலுக்கு உக்ரைனும் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா முழுவதும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரோஸ்டோவ் பகுதியில், ஒரு தொழில்துறை தளத்தில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டார். மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே கிட்டத்தட்ட 180 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்பது மணி நேரத் தாக்குதலின் போது, 112 உக்ரைன் ட்ரோன்களை வானிலே பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தின என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பலர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சந்திரசேகர்
ஆக 03, 2025 16:31

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் தூண்டுதலால் உக்ரைன் அழியப்போகின்றது.ரஷ்யா அணு ஆயுதம் உபயோகபடுத்த ஆரம்பித்தால் உலகம் தாங்காது.எத்தனை நாடுகள் அழியும்


M Ramachandran
ஆக 03, 2025 16:00

அடாவடி அமெரிக்கா ஐரோப்பியன் நாடுகள் உக்ரைன் திருந்த விட போவதில்லை.இவர்கலிய்ய அடக்கி வைக்க ஒரு நாடு வர வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரம் மிக விரையவில் வீழ்ச்சியடையும். நம்மைய்ய விட அமெரிக்கா நடுத்தர மக்கள் விளை வாசி உயர்வால் வெளியிட முடியாமல் மிக கஷ்ட படுகிறார்கள். அங்கேயும் பணக்காரர்கள் அரசியல் வாதிகளால் அவஸ்தைய்ய பட்டு கொண்டிருக்கிறார்கள். பெயரளவில் தன் சுதந்திரம். பதவியில் அமரும் காட்சியக்கு பெரும் தனவந்தர்கள் அருள் வேண்டும்.அதனால் அவர்கள் கை பாவையாக அதிபர் செயல் பட வேண்டும். உதாரணத்திற்கு சாதார இருமல் மருந்தின் விலை கேட்ஸ்கோ குவாபேரேட்டிவ் போன்ற கடையிலே $26. வேறு மறுந்தகங் களில் $105, 115 டாலர்கள். கேட்டால் பிரைவேட் கம்பெனிகள் 5 அல்லது 6 மேப் MP க்கலைய்ய அவர்கள் வசம் வைத்து கொண்டு எந்த சட்டமும் அவர்கள் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி ஓட்டளிப்பில் செய்கிறார்கள். மக்கள் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.


Tamilan
ஆக 03, 2025 09:07

மோடி போரை தொடர்ந்திருந்தால் இதுதான் இந்தியாவின், குஜராத்தில் உள்ள அம்பானி அதானி சொத்துக்களின் நிலை . டிரம்ப் இந்தியாவை மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டார். நோபல் பரிசு கொடுக்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை