உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 300 கார், தனி ராணுவம், விமானங்கள்: இவ்வளவும் மலேசிய புதிய மன்னர் வைத்திருக்கிறாராம்!

300 கார், தனி ராணுவம், விமானங்கள்: இவ்வளவும் மலேசிய புதிய மன்னர் வைத்திருக்கிறாராம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்ட சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், 300 கார்கள், தனி ராணுவம் மற்றும் ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார். மலேசியா நாட்டின் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இருந்தாலும், அங்கு இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. இந்நாட்டின் நீதிமன்றங்கள், போலீசார் ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்நிலையில் மலேசியாவின் 17வது புதிய மன்னராக அரச குடும்பத்தை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசை ஆதரிப்பேன்

பதவியேற்ற பின்னர் அவர் கூறியதாவது: ‛‛நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் அவர்கள் தவறாக எதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன்' என்றார்.

சொத்து மதிப்பு

புதிய மன்னர் சுல்தானுக்கு சொத்துக்கள் மலேசியாவை தவிர பிற இடங்களிலும் அதிகமாக உள்ளன. சொத்து மதிப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். மேலும், அவர் 300 கார்கள், தனி ராணுவம் மற்றும் ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார்.தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள முதலீடுகள் மட்டுமே 588 மில்லியன் டாலர். சிங்கப்பூரில் வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டும் 4 பில்லியன் டாலர் ஆகும். இதனை தவிர ரியல் எஸ்டேட், சுரங்கத் தொழில்கள், தொலைத்தொடர்பு மற்றும் பாமாயில் உற்பத்தி என பல்வேறு தொழில்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராஜா
பிப் 01, 2024 04:56

திமுக குடும்பத்தில் பாதி கூட கிடையாது.


Ramesh Sargam
பிப் 01, 2024 00:36

கீழே உள்ள பாடலை முறையாக, தெளிவாக அவருக்கு புரியும்படி யாராவது மொழி பெயர்த்து கூறவும். நன்றி. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் காலில்லா கட்டிலடா பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா.


NicoleThomson
ஜன 31, 2024 22:08

எங்க கார்பொரேட் கம்பெனி தலைவர் மாதிரி வருமா?


Vemal
ஜன 31, 2024 22:07

His Son (The Crown Prince) has served in Indian Army before


Vemal
ஜன 31, 2024 22:06

His Highness is a very kind person, and close to people.. He respects all races and religions.. He's the only sultan who wishes for Deepavali, Ponggal and even Thaipusam.. He and his son (Crown Prince) used to visit Thaipusam events..


Kannan
ஜன 31, 2024 21:11

உழைப்பதநால் ஆஸ்திரேலியா ஹோட்டல் முதலாளிகள் 10 பில்லியன் வைத்துள்ளனர் இதோ ஒரு தண்ட சோறு , சிங்கப்பூர் மக்களின் வரிப்பணத்தில் வயிறு வழக்கும் கூடடம்


Sivagiri
ஜன 31, 2024 20:08

எப்டீன்னாலும் இங்க உள்ள அப்பா-டக்கர் கூட போட்டி போட முடியாது - -


பெரிய குத்தூசி
ஜன 31, 2024 19:44

புருனே மன்னரின் மாமனார் தான் ஜோகூர் சுல்தான், ஜோகூர் சுல்தான் மகளைத்தான் ப்ரூனே நாட்டின் மன்னர் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால்தான் ப்ரூனே பணம் சிங்கப்பூரில் எங்குவேண்டுமானாலும் பொருளை வாங்கிக்கொண்டு ப்ரூனே பணம் செலுத்தலாம். அதேபோல் சிங்கப்பூர் பணத்தை நேரடியாக ப்ரூனேயில் செலவு செய்யலாம். இன்று சிங்கப்பூர் என சொல்லப்படும் 3 0 சதுர கிலோமீட்டர் நாடு ஜோகூர் சுல்தானின் சொந்த நிலம் ஆகும், ஜோகூர் சுல்தான் கார் சிங்கப்பூர் வரும்போது அந்த காருக்கு நம்பர் பிலேட் இருக்காது, பாஸ்போர்ட் பரிசோதனை என எந்த பரிசோதனையும் கிடையாது.. சிங்கப்பூர் அரசு வருடாந்திர சிங்கப்பூர் நில லீஸ் கட்டணமாக பெரும் தொகையை ஜோகூர் சுல்தானுக்கு மாதம் மாதம் செலுத்தப்பட்டு வருகிறது என்ற கருத்து சிங்கப்பூர் மற்றும் ஜொகூரில் மக்களிடம் நிலவும் கருத்துக்கள் ஆகும்..


Kasimani Baskaran
ஜன 31, 2024 22:01

தவறான தகவல். ஜோகூர் சுல்த்தானுக்கு சிங்கப்பூரில் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் அவருக்கு உரிமை இருக்கிறது என்பதைத்தவிர தனி நாடான சிங்கப்பூர் மீது அவருக்கு எந்த வித சிறப்பு உரிமையும் இல்லை.


Duruvesan
ஜன 31, 2024 19:44

விடியல் கிட்ட hummer H3 RANGE ROVER இருக்கு


ஊழல் மரம்
ஜன 31, 2024 19:00

கட்டுமரத்தை மிஞ்ச எவனுமில்லை உலகில்!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை