உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவில் உள்ள யூத பழங்குடியினரை இஸ்ரேலில் குடியேற்றம் செய்ய ஒப்புதல்

இந்தியாவில் உள்ள யூத பழங்குடியினரை இஸ்ரேலில் குடியேற்றம் செய்ய ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம் : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எஞ்சிய, 5,800 யூதர்களையும் தங்கள் நாட்டில் குடியமர்த்தும் திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பினே மெனாஷே சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக மிசோரம் மற்றும் மணிப்பூரில் வசித்து வருகின்றனர். இவர்கள் யூத மதத்தின் ஒரு பிரிவினர் ஆவர்இவர்களை இஸ்ரேலுக்கு குடிபெயரச் செய்வதற்கான திட்டத்துக்கு அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சமூகத்தினரை ஹீப்ரூ மொழியில் அலியா என அழைக்கின்றனர். ஏற்கனவே செயல்முறையில் உள்ள இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், 1,200 பேர், 2026ம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேல் குடிபெயர உள்ள நிலையில் எஞ்சிய, 5,800 பேரை அழைத்துக் கொள்வதற்கான திட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டம் முழுமையாக வருகிற, 2030ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தெரிகிறது. இவர்களுக்கான விமான பயண செலவுகள், குடிபெயர்வுக்கு முந்தைய நடைமுறைகள், தற்காலிக வீடுகள் உள்ளிட்டவைகளுக்கான திட்ட செலவாக கிட்டத்தட்ட, 238 கோடி ரூபாய் சிறப்பு நிதி தேவைப்படுகிறது-.கடந்த, 20 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 4,000 பேர் ஏற்கனவே இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியினரான பினே மெனாஷே சமூகத்தினர் 2,700 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ