உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாசுக்கு கடைசி வாய்ப்பு: ஞாயிற்றுக்கிழமை மாலை வரை டிரம்ப் கெடு

ஹமாசுக்கு கடைசி வாய்ப்பு: ஞாயிற்றுக்கிழமை மாலை வரை டிரம்ப் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் தான் ஹமாஸ் அமைப்பினருக்கு கடைசி வாய்ப்பு. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அவர்கள் கையெழுத்து போட வேண்டும்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

ஒப்பந்தத்தை ஏற்க சம்மதம்

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசியிருந்தார். அப்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை அவர்கள் எதுவும் கூறவில்லை.இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பினர் ஒரு இரக்கமற்ற மற்றும் வன்முறை அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இஸ்ரேலின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கொன்றதுடன் அவர்களின் வாழ்க்கையை தாங்க முடியாத அளவுக்கு துயரமாக்கி உள்ளனர்.

ஹமாசுக்கு கடைசி வாய்ப்பு

2023 அக். 07 ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 25 ஆயிரம் ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சுற்றுவளைக்கப்பட்டு ராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கான உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். மீதமுள்ளவர்களை பொறுத்தவரை நீங்கள் யார் என எங்களுக்கு தெரியும். நீங்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவீர்கள். அனைத்து அப்பாவி பாலஸ்தீனியர்கள் தங்களின் சிறப்பான எதிர்காலத்துக்காக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும். அவர்களுக்கு சிறப்பான உதவி செய்யப்படும். ஹமாசுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மத்திய கிழக்கின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மிகவும் பணக்கார நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் எஞ்சியுள்ள ஹமாஸ் போராளிகளை காப்பாற்றும். ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் உலகிற்கு தெரியும். அனைவருக்கும் சிறந்த ஒன்றாக இருக்கும். மத்திய கிழக்கில் ஏதோ ஒரு வழியில் நமக்கு அமைதி இருக்கும். வன்முறை மற்றும் ரத்தக்களறி நிறுத்தப்படும். இறந்தவர்கள் உட்பட அனைத்து பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் அமைப்பினர் கையெழுத்து போட வேண்டும். ஒவ்வொரு நாடும் கையெழுத்து போட்டுள்ளனர். இது கடைசி வாய்ப்பு. ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், முன்பு யாரும் கண்டிராத வகையில், அனைத்து நரக வேதனை ஹமாசுக்கு கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajasekar Jayaraman
அக் 04, 2025 08:02

முதலில் உன் நாட்டில் உன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள் பிறகு மற்றவர்களை மிரட்டலாம்.


VRM
அக் 04, 2025 07:48

இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று கூக்குறலிட்ட மூர்க்க கும்பலில் இருந்து ஒரு பயபுள்ளகூட ஹமாஸ் ஒப்பந்ததை ஏற்றுகொண்டு போருக்கு முற்றிப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறவில்லை பாருங்கள். திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் உள்ளனர். இவர்களுக்கு மற்ற மற்ற மதத்தினருடன் இணைந்து அமைதியாக வாழவே முடியாது. அவர்கள் டிசைன் அப்படி. இந்துக்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.


Kasimani Baskaran
அக் 04, 2025 07:26

யாருக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அவர்கள் அழிவதை பார்த்துக்கொண்டு தொடர்ந்து வீம்பு செய்வது அவர்களின் அடிப்படை நோக்கம் பாலஸ்தீனம் என்பது அல்ல என்பதை தெளிவு படுத்தி விட்டது.


M Ramachandran
அக் 04, 2025 00:46

துக்களக் தர்பார் நடுவதால் நாட்டின்நிலமை மொலாசமைக்கி கொண்டே போகிறது. உன்னால் பல நாடுகளுக்கும் கேடு. உன் பெரியண்ணன் வேலயை நிறுத்து. அந்த நாட்டு பிரச்சனை அந்த நாடுகள் பார்த்து கொள்ளட்டும். உன் பான் திமிரைய்ய காட்டி இப்போ தெல்லாம் பணிய வைக்க இயலாது. உலக நாடுகளில் சண்டைய்ய்க்கு காரணமெ அமெரிக்கா தான். அனாவசிய மாக் அவர்கள் பொருளாதாரம் கெடுகிறது. ஆரம்பத்திலிருந்தே நீக இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்து கொண்டு தான் வருகிறீர்கள். முன்பிருந்த முன்பு ஆண்ட காங்கிரஸின் கையாலாகாத்தனத்தினால் நம் இந்தியா இழந்தது அதிகம். இப்போனது இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. உங்க உண்மையான முகம் வெளியில் தெரிய இந்தியா காரணம். இப்பொது உங்க மேலிருந்த நம்பிக்கை பயம் எல்லாம் எல்லா நாட்டிற்கும் தெரிந்து விட்டது. இப்போ குய்யோ முறையோ என்று கத்து கிறீர்கள். இந்திய அரசாஙகதை மிரட்ட பல உக்திகளை செய்யகிறீர்கள். நாட்டிற்குள் இருக்கும் கருங்காலிகளுக்கு பண உதவி செய்யகிறீர்கள். இது ஒரு ஹிந்து தர்மத்திய பின் பற்றும் நாடு. கடவுள் எங்கள் பக்கம்.


M Ramachandran
அக் 04, 2025 00:31

ஹமாஸ் மதத்தின் பெயரால் சிலர் சிமிசம் செய்யவதற்கு பலியாகாமல் உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுங்க்ல ஊர்ரோடு ஒத்து போலாவது நன்று. சிலர் வாழ பெரும்பான்யோறை பாலி கொடுத்து அவர்கள் சுக போர்க் வாழ்க்கையில் திளைக்கிறார்கள். என்றுமெ தீவிர வாதம் வென்றது கிடையாது. மக்களை பயமுறுத்தி அடிமை படுத்த முடியாது. அதே ஒரு நாள் நீங்கள் தீவிர வாதிகள் சந்திக்க வேண்டி வரும். பல ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம் கலால் பிரச்னையாகிறார்கள். சமீபத்தில்கூட ஒரு ஐரோப்பிய நாட்டில் பின்லாத்து அங்கு இருக்கும் அந்த நாட்டின் குடி மகனை வம்பிற்கிழுத்தூ எனக்கு 4 குழந்தைகள் உனக்கு ஒன்னு தான் இன்னும் இரு பது ஆண்டுகளில் நாஙக நாட்டைய பிடித்து விடுவோ ம் உஙகளையய விரட்டி விடுவோம் என்று பேச சண்டை மூண்டிருக்கு. இது ஊடகத்திலும் வந்தது. இங்கிலாந்திலும் இப்போ இந்த அகதகிகளாக புகுந்து அரசய்ய பலவகையில் ஏமாற்றி வருகின்றனர். இது பாராளு மன்றத்திலும் எதிர் ஒழிக்க அப்போது இந்த நாட்டு சட்டத் தால் அவர்களய் ஒன்றும் செய்ய முடியாது என்று கைய விரித்து விட்டனர். சிலர் வேறு நாடுகளுக்கு அயர்லாந்து, கிறீன் லாந்து ஆஸ்திரேலியா போனற நாடுகளுக்கு குடி பெயர்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட மேன்செஸ்டரில் சர்ச்சுக்குள் வந்து பிராயருக்கு வந்தவர்களாய் கத்தியால் குதி இருவர் இறந்தனர் சிலருக்கு பலத்த காயம் ஏஆர் பட்டது. இப்படியென போனால் இஸ்ரே ல் செய்வது ஞ்யாமாகிவிடும். அது போல் மற்ற நாடுகளும் ஆரம்பித்து விடும். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பதாய் தவிர்க்க வேண்டும். இப்போது தீவிர வாதத்தினையய ஊக்கு வித பாகிஸ்தான் மக்கள் நிலை மிக மொலாசம் அடைந்து வருகிறது. மக்களும் உணர ஆரம்பித்து விட்டார்கள்.


Bhakt
அக் 03, 2025 23:47

He deserves Noble "Empty Vessels Make More Noise" prize.


Sun
அக் 03, 2025 23:09

ஹமாஸ், இஸ்ரேல் போரை முடிக்கிறோம். நோபல் வாங்குறோம். ஓகே? ஓகே பாஸ்! டன் !


புதிய வீடியோ