உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் நாங்கள் தான் கோரினோம்: பாக்., துணைப்பிரதமர் ஒப்புதல்

போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் நாங்கள் தான் கோரினோம்: பாக்., துணைப்பிரதமர் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: '' பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானப்படை தளம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே, போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,'' என பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஹிந்து சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=34l6x3es&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதையடுத்து, இந்திய எல்லைக்குள் ராணுவம் மற்றும் சிவிலியன் இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. பதிலுக்கு, பாகிஸ்தானில் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் ஷோர்காட் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து, போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதனை இந்தியா ஏற்றுக் கொண்டதால், நான்கு நாட்களாக நீடித்த சண்டை, மே 10ல் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார்.“போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் உங்கள் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் எச்சரித்தேன். உடனே போரை நிறுத்தி விட்டார்கள்” என்று ட்ரம்ப் மார்தட்டினார். ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு ''ட்ரம்ப் சொன்னது உண்மை அல்ல; பாகிஸ்தான் ராணுவ தளபதி தான் நமது தளபதியுடன் போனில் பேசி, போர் நிறுத்தம் செய்ய முன்வந்தார். பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று, போரை நிறுத்த இந்தியா சம்மதித்தது” என்று விளக்கம் அளித்தது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை தாங்கள் தான் கோரினோம் என்பதை பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் ஒப்புக் கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: துரதிர்ஷ்டவசமாக, இந்தியா மீண்டும் அதிகாலை 2:30 மணிக்கு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் நூர் கான் விமானப்படை தளத்தையும், ஷோர்கோட் விமானப்படை தளத்தையும் தாக்கினர். அடுத்த 45 நிமிடத்தில் சவுதி இளவரசர் பைசல் என்னை அழைத்தார். அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரூபியோவுடன் நான் பேசியது குறித்து அறிந்ததாக தெரிவித்தார். மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசவும், இந்தியா தாக்குதலை நிறுத்தினால், பாகிஸ்தானும் நிறுத்த தயாராக இருக்கிறது என்று தெரிவிக்க தனக்கு அதிகாரம் உள்ளதா என்று அவர் கேட்டார். அதற்கு நான், '' ஆம் சகோதரரே, உங்களால் முடியும்'' என்றேன். பின்னர் அவர் என்னைத் திரும்ப அழைத்து, ஜெய்சங்கரிடம் அதையே தெரிவித்ததாக கூறினார்,'' இவ்வாறு அவர் கூறினார்.நூர்கான் விமானப்படை தளம் என்பது பாகிஸ்தானின் முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்றாகும். ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடையே இது அமைந்துள்ளது. ராணுவ நடவடிக்கைகள் மற்றும் விஐபி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஷோர்கோட் விமானப்படை தளம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Tetra
ஜூன் 21, 2025 14:28

வேணுகோபால் பெல்காம் தீவிரவாதிகள் உங்கள் தலைவரின் வீட்டில் இருப்பதாக ஒரு ஊகம்.‌அதனால்தான் பிடிக்க முடிய வில்லை


Ravi Kulasekaran
ஜூன் 21, 2025 08:17

பாக்கிஸ்தான் எங்களுக்கு ஒரு சுண்டெலி ஊதி தள்ளிவிட்டு எங்கள் வேலையை செய்து கொண்டு இருப்போம் இனி சிறிதாக தாக்குதல் நடத்தால் உலக வரைபடத்தில் பாக்கிஸ்தான் இல்லை அவ்வளவு தான் இந்தியாவின் நிலைப்பாடு பிரதமர் மோடியின் நிலைபாடு


venugopal s
ஜூன் 21, 2025 10:26

பஹல்காம் குற்றவாளிகளை இப்போது வரை பிடிக்க முடியவில்லை.


venugopal s
ஜூன் 20, 2025 22:03

நீங்கள் யாரை சொல்லச் சொன்னாலும் மக்கள் நம்பப் போவதில்லை, அவர்களுக்கு உண்மை தெரியும்!


Thravisham
ஜூன் 21, 2025 09:00

அடிச்ச சரக்கு இன்னும் எறங்களையா?


Ramesh Sargam
ஜூன் 20, 2025 21:09

எங்களுக்கு ஒருவேளை சோத்துக்கே வழியில்லை. போர் தொடர்ந்தால் அந்த ஒருவேளை சோறும் கிடைக்காது என்று அழுதுபுலம்பி போரை நிறுத்தச்சொல்லி இருப்பார்கள். மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவும் போகட்டும் என்று போரை நிறுத்தி உள்ளது. இந்த போர் நிறுத்தம் தற்காலிகம்தான். மீண்டும் வாலை ஆட்டினால் தொலைந்தது பாகிஸ்தான்.


S Mukkunden
ஜூன் 20, 2025 20:46

சிதம்பரம் முகத்தில் கரி பூசி விட்டார். ரோஷம் இருந்தால் சிதம்பரம் மன்னிப்பு கேட்க vendum.


V Venkatachalam
ஜூன் 20, 2025 20:36

இது கூட பப்புவ காப்பாத்த பாகிஸ்தானின் முயற்சி. இல்லை என்றால் பப்புவுக்கு இந்தியாவில் செமத்தியாக அடி விழும் ன்னு அவிங்களுக்கு தெரிஞ்சப்புறம் அவிங்களால சும்மா இருக்க முடியுமா? இந்தியாவ எதிர்த்து பேச பப்பு மட்டுந்தான் இருக்கான். ஓவைசி முழி பிதுங்கிப்போய் பாகிஸ்தானையே திட்ட ஆரம்பிச்சுட்டான். ஓமர் அப்துல்லாவ பத்தி கேக்கவே வாணாம். பப்புவுக்கு முட்டு குடுத்தவனெல்லாம் இப்ப மூஞ்சிய எங்க வச்சினுப்பானுங்க.


vadivelu
ஜூன் 20, 2025 20:25

ட்ரவுசர் பாய்ஸ் கேட்டுக்குங்க.


மோகன்
ஜூன் 20, 2025 19:01

இனிமேல் நீங்க வயசுக்கு வந்தா என்ன... வராட்டி என்ன... கர்நாடகா ரசிகர்கள் அதிர்ஷ்டசாலிகள். தப்பித்து விட்டார்கள்.


bogu
ஜூன் 20, 2025 19:01

வாப்பா பப்பு தஞ்சை மூர்க்கன்ல் உங்க ஆளே சொல்லிட்டான் நாங்க தான் surrender ஆனோம் அப்படின்னு... உமக்கு இதுக்கும் மேலே சந்தேகமா... நீங்க அங்கேயே போயி கேட்டுட்டு அங்கேயே இருந்துடுங்க திரும்ப இங்கே வராதீங்க.


D.Ambujavalli
ஜூன் 20, 2025 18:51

என்ன கொடுமையடா இது? 'அமெரிக்க ஸ்டிக்கர் ' இப்படியா கிழிந்து தொங்க வேண்டும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை