உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் விமானம் தயாரிக்கும் முட்டாள்கள்; எலான் மஸ்க் கடும் விமர்சனம்!

போர் விமானம் தயாரிக்கும் முட்டாள்கள்; எலான் மஸ்க் கடும் விமர்சனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். புதிய அரசில், டிரம்புக்கு ஆலோசனை வழங்கும் செயல்திறன் துறையின் இணைத் தலைவராக எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் போர் விமானங்களை, ஆளில்லா விமானங்களாக (ட்ரோன்) மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவர், போர் விமானங்களால் விமானிகள் கொல்லப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மனிதர்களை ஏற்றிச் செல்லும் போர் விமானங்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து மஸ்க் சந்தேகம் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. 2020ம் ஆண்டில், பாரம்பரிய போர் விமானங்களின் சகாப்தம் முடிவுக்கு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். 2015ம் ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த போர் விமானமான F-35-ஐ மஸ்க் விமர்சித்துள்ளார். நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடும் வீடியோவை எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''சில முட்டாள்கள் இன்னும் போர் விமானங்களை உருவாக்குகிறார்கள்,' என பதிவிட்டு இருப்பது பேசும் பொருளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ச. ராமச்சந்திரன்
நவ 27, 2024 09:45

ஹி ஐஸ் ரைட். Scham ஜெட் வந்தாச்சு. இருக்கும் இடத்திலிருந்து பட்டனை தட்டிவிட்டால் எல்லாம் close.


Veerasamy R
நவ 27, 2024 09:25

If both countries, rivals, have drones there will be deepavali celebration. Better do not produce war planes and drones.


Ramesh Sargam
நவ 26, 2024 22:36

முட்டாள்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் இந்த மஸ்க்? அதாவது எந்த நாட்டினரை? இவர் வசிக்கும் அமெரிக்காவும் அப்படிப்பட்ட போர் விமானங்களை தயாரிக்கின்றன. அப்படி என்றால் அமெரிக்காவும் முட்டாளா?


தாமரை மலர்கிறது
நவ 26, 2024 20:04

மிக பெரிய மிசைல்களை இன்னமும் மனிதர்கள் இயக்கும் விமானங்கள் மூலம் தான் ஏவுகிறார்கள் காரணம் பணம் தான். ஆளில்லாத விமானத்தை நம்பாமல், இவ்வளவு செலவு செய்து ஏவப்படும் மிசைல்கள் சரியான இடத்தை தாக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.


J.V. Iyer
நவ 26, 2024 17:53

இவர் சொல்வது சரிதானே? இப்போது ட்ரோன் தானே வேண்டும்?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 15:18

அமெரிக்கா, சீனா கூட நவீன தொழில் நுட்பத்தில் போர் விமானங்களைத் தயாரிக்கும் முயற்சியில் உள்ளன .... இதில் சீனா தனது பழைய போர் விமானங்களில் உள்ள குறைகளைக் களையும் விதத்தில் புதிய போர் விமானங்களில் டெக்நாலஜியைப் புகுத்த முனைகிறது .....


M Ramachandran
நவ 26, 2024 17:11

ஆயுத வியாபாரிகள் தான் போர் விமானிகளை தயாரித்து பணம் பண்ணுகிறார்கள். அவர்கள் சண்டைய்ய் மூட்டி குளிர் காய்கிறார்கள்


Palanisamy T
நவ 26, 2024 13:58

பணத்திற்காக இவர் எந்த எல்லைக்கும் போவாரென்று ஒரு யூக அடிப்படையில் சொல்லலாம் இவரைப் ஒரு அரசியல்வாதியாக பார்ப்பதைவிட தொழிலதிபராக பார்த்தால் கொஞ்சம் உண்மை விளங்கும் .


கிஜன்
நவ 26, 2024 10:25

அவரு இப்பல்லாம் இந்தியாவை பத்திதான் மேற்கோள் காட்டுறாரு .... ஒருவேளை தேஜசை சொல்லியிருப்பாரோ ?


Kumar Kumzi
நவ 26, 2024 10:48

பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்கன் எப்போதும் இந்தியாவுக்கு எதிரியா தான் இருப்பான்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 14:55

பாகிஸ்தான் ஒரு நவீன போர் விமானத்தை சீனாவிடம் வாங்கியுள்ளது .... இடைமறிக்க முடியாதது என்று சொல்லப் படுகிறது ..... அதை இடைமறித்து தாக்கி அழிக்க வேறொரு போர் விமானத்தை இந்தியா உருவாக்கிவிட்டதாகவும் கேள்வி .... அதுதான் மூர்க்க வந்தேறி கிஜனுக்கு பயம் ....... பாகிஸ்தான் போர்விமானம் பாரதத்தில் ஹிந்துக்களாக பார்த்துப்பார்த்து தாக்கும் .... மூர்க்க வந்தேறிகளை விட்டுவிடும் என்று நினைத்துவிட்டானா, தெரியவில்லை ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை