உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை: வரி விதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப்

எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை: வரி விதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7fgmct3r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். நிதி பற்றாக்குறையை சரி செய்ய வரி விதிப்பதே ஒரே வழி என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.இது குறித்து சமூகவலைதளத்தில், அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது. இந்தப் பிரச்னையை தீர்க்க ஒரே வழி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது மட்டுமே.அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இவற்றை ஒரு அழகான விஷயமாக கருதுகிறேன். தூங்கும் ஜோ பைடனின் அதிபர் பதவி காலத்தில், அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் அதை மாற்றப் போகிறோம். விரைவில் மாற்றப் போகிறோம். அமெரிக்காவிற்கான வரிகள் மிகவும் முக்கியமான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mr Krish Tamilnadu
ஏப் 07, 2025 14:14

நமது மக்களாட்சி தான், எதிர் கட்சிகள் துணிந்து எதையும் செய்ய விட மாட்டார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, குடைச்சல் உரிமை எல்லாம் வைத்து இருப்பவர்கள். அடுத்து வெளி நடப்பு என்பார்கள். அதற்கு அடுத்து நீதிமன்ற வழக்கு அப்ப அப்பா. தூங்க விடமாட்டார்கள். இவர்களோடு போராடி, ஒரு விசயத்தை செய்ய வேண்டும். அதற்கு பிறகும், ஏதோ ஆனால் அன்றே நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். என்பார்கள். கருப்பு கொடி, கட்சி கொடி ஆர்ப்பாட்டம். உண்ணும் விரதம், உண்ணாவிரதம் - அரசை வழி தவறி செல்லாமல் பார்த்து கொள்வார்கள். வாழ்க நமது ஜனநாயகம். முன் விளைவே பயங்கரமாக இருக்கும் போது, பின் விளைவு எப்படி வரும். நமது பார்லி விவதாங்களை டிரம்ப் அவர்களுக்கு போட்டு காட்டவும்.


Mario
ஏப் 07, 2025 14:12

பெரிய ஆப்பாக வைத்த அதிபர் டிரம்ப்


ஆரூர் ரங்
ஏப் 07, 2025 13:10

அமெரிக்கா ஆண்டுக்காண்டு அதிக டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு பொருளாதாரத்தை சமாளிக்கிறது. அப்படியும் டாலரின் மதிப்பு அதிகரிக்கிறது. இப்போது டிரம்ப் செய்வதெல்லாம் மீண்டும் ஏக வல்லரசாக ஆட்டிப் படைக்கும் ஆசையில். அவரது வரி நாடகத்துக்கு ரஷ்யாவும் சீனாவும் அஞ்சவில்லை. அன்னிய மோகம் ஒழிந்தால் நாமும் அஞ்சவேண்டியிருக்காதே


Ramesh Sargam
ஏப் 07, 2025 12:53

எங்களுக்கு என்றால் யாருக்கு? டிரம்புக்கும் மற்றும் அவர் கூட்டாளிகளுக்குமா...?


kalyan
ஏப் 07, 2025 12:43

சிங்கப்பூர் போன்ற நாடுகளை விலங்குகளுக்கு குரங்கு, தெருவில் திரியும் பூனை போன்ற மக்கள் இலவசமாக தீனி போடுவது குற்றமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஏதேனும் சமயங்களில் இலவச தீனி கிடைக்காவிட்டால் விலங்குகள் கோபமாகி மனிதர்களை தாக்கும் குணம் கொண்டது என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள் இங்குள்ள கோவில்களிலும் குரங்குகள் உணவு உள்ள பைகளை தட்டிப்பறித்து செல்வதை பார்க்கலாம் அமெரிக்காவில் வரியில்லாமல் பொருள்களை ஏற்றுமதி செய்து , அமெரிக்க பொருள்களுக்கு பெரிய அளவில் வரி விதித்து நன்மை அடைந்து கொண்டிருந்த நாடுகள் , இதனால் அமெரிக்க பொருளாதாரம் பெரிய கடன் சுமையில் ஆழ்ந்து விட்டது அந்த நனமை இப்போது காணாமல் போகும்போது கோபம் அடைந்து டிரம்பின் கொள்கையை அமெரிக்க தான் முதல் எதிர்க்கின்றனர் .


Sivagiri
ஏப் 07, 2025 12:04

சரிதான், இங்கே அரசியல்வாதிகள் கொள்ளை அடிச்சு நாட்டை காட்டிக் கொடுத்திடுறாங்க.. அதுக்குதான் சிபிஐ, ஈடி, ஐடி ரைடுகள் பண்ணி, எதோ கிடைச்சவரை பரவாயில்லன்னு போயிடறாங்க, அப்புறம் கோர்ட்டு போலீசு ஜெயிலுன்னு பின்னாலும்.... அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கை கோர்த்துக்கிட்டு கொள்ளை அடிக்கிறாங்க... அங்கே அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க முடியாது, ஆனா, மக்கள் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்கு பணத்தை வாரி இறைச்சா, ஆனால் கவர்ன்மெண்டுக்கு வரி மட்டும் கொடுக்க முடியால, கவர்ன்மெண்டு கடன் வாங்கி மக்களின் ஆடம்பரத்துக்கு தீனி போட முடியுமா? கொஞ்சம் மக்களிடம் இருந்து பிடிங்கி கடனை அடைக்க வேண்டியதுதான் . .


அப்பாவி
ஏப் 07, 2025 09:49

நியாயம் தான். அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் கொழித்து வந்தார்கள். இப்போ அமெரிக்காவுக்கு 35 டிரில்லியன் டாலர் கடன் தான் மிச்சம். இப்போ டாரிஃப் ஐ ஒசத்தினதும் ஆளாளுக்கு ஒப்பாரி.


ராமகிருஷ்ணன்
ஏப் 07, 2025 08:46

திராவிட விடியல் போல அமெரிக்க விடியலார், வெளங்கிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை