உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என்னுடன் வாதம் செய்ய முடியாது: டிரம்ப் பேட்டி

என்னுடன் வாதம் செய்ய முடியாது: டிரம்ப் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' என்னுடன் யாரும் வாதம் செய்ய முடியாது,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி என்னை சந்தித்தார். அப்போது, அமெரிக்க பொருட்களுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு இந்திய பொருட்களுக்கும் வரி விதிப்போம் என்றேன். அதற்கு பிரதமர் மோடி, அப்படி செய்ய வேண்டாம் என்றார். அதனை மறுத்த நான், நீங்கள் என்ன வரி விதிக்கிறீர்களோ, அந்தளவு வரி விதிப்போம். அனைத்து நாடுகளுக்கும் அதனையே செய்கிறேன் என்றேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=frqwluqt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவில் வரி விகிதம் அதிகமாக உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பொருட்களை இந்தியாவில் விற்க வேண்டும் என்றால், தங்களது கிளைகளை அங்கு துவங்க வேண்டும். இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு அநீதியாக உள்ளது. என்னுடன் யாரும் வாதிட முடியாது. 25 சதவீதம் வரி விதிக்கப் போகிறேன் என்றால், அது மோசம் என்கின்றனர். இனிமேல் நான் எதுவும் கூறப்போவது கிடையாது. ஏனென்றால், நீங்கள் என்ன வரி விதிக்கிறீர்களோ அந்தளவு வரி விதிப்பேன் என ஏற்கனவே கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ram Moorthy
பிப் 21, 2025 01:13

அதாவது அமெரிக்காவிடம் மூன்றாம் நாடுகளை விட நிதி கஜானா அளவு குறைந்து விட்டது அதனால் இந்த நிர்பந்தமா


Vinay
பிப் 19, 2025 23:45

ஆமா அமெரிக்கா வந்து ஹிந்தில பேசற, அவன் மூஞ்சி முன்னாடியே கழுவி ஊத்துறான், எதுவும் பேசாம அமைதியா இருக்குற, மொதல்ல மும்மொழி நீங்க படிங்க, ஒரு இந்தியன் ரிப்போர்ட்டர் இங்கிலீஷிலே கேள்வி கேக்க தெரியாம கூட வந்துருக்கான் , டிரம்ப் அவன் பேசறதே புரியலைன்னு சொல்லிட்டான்


Sri
பிப் 19, 2025 23:17

உங்கள் கடையை இந்தியாவில் இருந்து துரத்தலம்


subramanian
பிப் 19, 2025 22:42

Adamant Trump. How to levy tariff on goods? Proper Guidelines followed in India. Trump dont be in hurry to show your power..... let us frame a international accep Guidelines on import of goods. Every country has its limitations and rights to control their market.


அமெரிகிரீஷ்
பிப் 19, 2025 22:05

அமெரிக்காவின் ப்ரொடக்ட்டிவிட்டி மூத்த நாடுகள்சி விட அதிகமா இருந்த போது எல்லோருக்கும் வரி சலுகைகளையும் வழங்கியது. நிதியுதவியும் வழங்கியது. இன்னிக்கி உலகநாடுகள் எல்லாம் உற்பத்தி திறனில் முன்னேறி அமெரிக்காவுக்கு அட்வாண்டேஜ்னு எதுவும் இல்லை. மேலும் அமெரிக்க டாலருக்கே ஆப்பு வெக்குற அளவுக்கு BRICS நாடுகள் முன்னேறிடிச்சு. இது ட்ரம்ப்பின் முடிவு மட்டுமல்ல. அமெரிக்காவின் டீப் ஸ்டெட் டின் முடிவு. ட்ரம்பை அவர்கள் இயக்குகிறார்கள். ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் இன்னும் போர்களை அதிகமாக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ரஷியா, சீனா,இந்தியாவை காலி பண்ணலாம்னு ட்ரம்ப் நினைக்கிறார்நு நான் நினைக்கிறேன்.


S.Martin Manoj
பிப் 19, 2025 21:27

குமார் குமிழி நீ கூடத்தான் ஒரு மத தீவிரவாதி


Rengaraj
பிப் 19, 2025 16:29

புதுசா யூனிஃபாரம் போட்ட போலீஸ்காரர் மாதிரி டிரம்ப் விறைப்பா பேசறார். டிரம்ப் இந்த விஷயத்தில் தனது நாட்டை முன்னிறுத்தி பேசுவது இயல்புதான். அவர் தனது நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் செய்ய நினைக்கிறார். தவறில்லை. அமெரிக்காவின் வணிகத்தை நம்பி இருக்கும் மற்ற நாடுகளுக்கும் கால அவகாசம் தரவேண்டும். இந்த விஷயத்தில் நமது பிரதமர் எடுத்தேன் , கவிழ்த்தேன் என்று இருந்துவிடமுடியாது. ஏற்கெனெவே சுயசார்பு பொருளாதாரம் நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். நமக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகமான அம்சம் , நமது நாட்டு மக்கள்தொகை, மற்றும் பெரிய நுகர்வோர் சந்தை. அதேபோன்று நமதுநாட்டின் இளையசக்தி. நமது நாட்டை ஒதுக்கிவிட்டு அமெரிக்கா பொருளாதாரத்தில் அவர்கள் நினைக்கும் அளவுக்கு முன்னேறிவிட முடியாது. நமது வழிக்கு அவர்கள் வந்துதான் ஆகவேண்டும்.


abdulrahim
பிப் 19, 2025 16:18

குரானையும் அண்ணல் நபியையும் சங்கிகள் பழித்த போது ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகள் என்ற போது எதிர்வினையாற்றாமல் இருந்தவன் இஸ்லாமியனா கேவலம் ஒரு பத்திரிக்கையின் கருத்து பகுதிக்காக தனது மத அடையாளத்தையே மாற்றிக்கொண்டு போலி இஸ்லாமியனாக வலம் வருபவர் உங்களுக்கு உத்தமராக்கும் ???


Haja Kuthubdeen
பிப் 19, 2025 16:35

அவரைப்பற்றிய சந்தேகம் எணக்கும் உண்டு....


ஆரூர் ரங்
பிப் 19, 2025 18:03

மற்ற மதத்தினரை பாவிகள் ஹராமி என்று அழைத்த போது இனித்ததா?


Kumar Kumzi
பிப் 19, 2025 18:36

பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா எல்லாரும் ஒன்னா சேர்ந்து ஊளையிடுறாங்க. மூர்க்க காட்டுமிராண்டிங்க எல்லாருமே பயங்கரவாதி தான்


Anand
பிப் 19, 2025 18:59

வெறிபிடித்த ......போல் இல்லாமல் அவர் மனிதனாக இருக்க விரும்புகிறார்...


Moorthy
பிப் 19, 2025 16:05

ஸ்மார்ட் டிரம்ப்


Gurumurthy Kalyanaraman
பிப் 19, 2025 15:14

இந்த மாதிரி சமயங்களில் ஆம் என்றோ இல்லை என்றோ கூறாமல் சிறிது கால அவகாசம் கேட்பதுதான் நல்ல ஐடியா. அதைத்தான் மோடி செய்து இருக்கிறார். ஆம் என்றால் த்ரும்பின் அட்டகாசத்தை ஏற்று கொள்ளகிறோம் என்று ஆகிவிடும். இல்லை என்றால் இந்திய ஏற்றுமதிகள் நின்று விடும். ஆகயால் கால அவகாசம் கேட்டு, மற்ற அமைச்சரகளையும் எதிர் கட்சி அறிவாளிகளையம் கேட்டு, பின் முடிவு எடுப்பதே சரி. சஷி தரூரும் இந்த அணுகுமுறையை பாராட்டி இருக்கிறார். இந்த பாராட்டிற்காக அவர் கட்சி நீக்கம் செய்ய படலாம். இருந்தாலும், சமயத்திற்கு ஏற்ற வகையில் மோடி இதை கையாண்டார் என்பதே உண்மை.


raju
பிப் 19, 2025 16:23

ஏன் எதிர்த்து பேச முடியாது . இப்போ சொல்லுங்க இதற்கு கரணம் நேரு தான் .அப்பவே அவர் வரியை கூட ஒத்துக்கொண்டால் இப்போ இந்த பிரச்சினை வராதுல்ல


புதிய வீடியோ