உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கோட் சூட் போட்ட ஒசாமா பின்லாடன்: பாக் ராணுவ தளபதியை விமர்சித்த அமெரிக்க முன்னாள் அதிகாரி

கோட் சூட் போட்ட ஒசாமா பின்லாடன்: பாக் ராணுவ தளபதியை விமர்சித்த அமெரிக்க முன்னாள் அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், சூட் போட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் போன்றவர், '' என அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அலுவலகமான பெண்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனக்கூறி அவரை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் மகிழ்ச்சி படுத்தினார். இதனையடுத்து அவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த டிரம்ப் விருந்து கொடுத்து கவுரவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qt2citc4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மிரட்டல்

ஆசிம் முனீர் 2வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு புளோரிடாவில் நிகழ்ச்சி ஒன்றில் ஆசிம் முனீர் பேசியதாவது:சிந்து நதி, இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல; பாகிஸ்தானுக்கும் சொந்தமானது. சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி வருகிறது. அது கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். பணிகள் முடிந்ததும், 10 ஏவுகணைகளை வீசி அணையை தகர்த்து விடுவோம். ஏவுகணைகளுக்கு எங்களிடம் பஞ்சம் இல்லை. பாகிஸ்தான் அணு ஆயுத நாடு. எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் எழுந்தால், உலகின் பாதி நாடுகளை அழித்துவிடும் வல்லமை எங்களுக்கு இருக்கிறது என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, 'எதிரிகளிடம் இருந்து மிரட்டல் வந்தால் தேசத்தின் பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கை எடுக்கவும் இந்தியா தயங்காது. நட்பாக இருக்கும் ஒரு மூன்றாவது நாட்டின் பின்னால் ஒளிந்து கொண்டு, அணு ஆயுத மிரட்டல் விடுப்பதை காணும் போது வருத்தமே ஏற்படுகிறது' எனத் தெரிவித்து இருந்தது.

ரவுடி நாடு

இந்நிலையில் பெண்டகனின் முன்னாள் அதிகாரியான மைக்கேல் ரூபின் கூறியதாவது: குறைபாடு கொண்ட கண்ணாடி மூலம் பயங்கரவாதத்தை அமெரிக்கர்கள் பார்க்கின்றனர். பல பயங்கரவாதிகளின் அடித்தள சித்தாந்தங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவிலலை. சூட் அணிந்த பின்லாடன் போல் ஆசிம் முனீர் செயல்படுகிறார். பாகிஸ்தான் ரவுடி நாடு போல செயல்படுகிறது. அமெரிக்க மண்ணில் இருந்து பாகிஸ்தான் மிரட்டல் விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Shivakumar
ஆக 13, 2025 03:50

அதே ஒசாமா பின்லேடனை அமெரிக்கா எப்படி தேடி தேடி கொன்றது என்று உலகத்துக்கே தெரியும். அமெரிக்கா ஒருத்தனை வளர்த்துவிட்டு பின்பு தேவை இல்லையென்றால் எப்படி போட்டு தள்ளுவான் என்றும் தெரியும். அசிம் முனீருக்கும் பின்லேடன் கடித்தான்..


ஈசன்
ஆக 12, 2025 23:31

உலகின் பாதி நாடுகளை அழித்து விடுவார்களாம். கேவலம் ஒரு பிச்சைக்கார நாடு, கடன் வாங்கியே தான் நாட்டு மக்களின் வயிறை ரொப்பும் ஒரு கேவலமான நாடு உலக நாடுகளை அழித்து விடும் என்று இவன் ஊளை இடுகிறான். அமெரிக்கா ஒரு பச்சோந்தி. அமெரிக்காவுக்கு தாளம் போடும் நாடுகளே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா.


K.n. Dhasarathan
ஆக 12, 2025 21:26

அன்றைக்கே பாகிஸ்தானை அழித்திருக்க வேண்டும், போரை நிறுத்தியது பெரும் தவறு, அதனால்தான் இன்றைக்கு பாக்கிஸ்தான் தளபதி கொக்கரிக்கிறார், இன்னும் நுறு வருடங்களுக்கு பாக்கிஸ்தான் எழுந்த்திருக்க முடியாதபடி அடித்திருக்க வேண்டும்.


sankaranarayanan
ஆக 12, 2025 18:23

டிரம்பு மிரட்டலுக்கு உலகத்தில் எந்த ஜனநாயக நாடும் அடிபணியாது ராணுவம் அல்லது ராணுவ ஆட்சிபோல் நடத்து சில குட்டி நாடுகள்தான் அவரை ஆதரிக்கும் ஒரு நோபல் பெறுவதற்காக தன் மனத்தையும் நாட்டின் ஸ்திரத்தன்மையும் நலனைஅவ யம் அழிக்கும் அதிபராக இருக்கவே கூடாது இதை யாரிடம் சொல்வது யார் செய்வது சொல்லியும் திருந்தக்கூடிய ஆள் இவரில்லை காலம்தான் பதில் சொல்லவேண்டும் ஆண்டவன் உலகை காப்பாற்ற வேண்டும் ஆளுபவனை திருத்த வேண்டும்


பேசும் தமிழன்
ஆக 12, 2025 18:21

அப்படிப்பட்ட ஆள் தான் டிரம்ப்‌ அவர்களுக்கு நம்பிக்கையானவராக தெரிகிறார்..... பாகிஸ்தான் மற்றும் நாட்டுடன் உங்கள் உறவு சிறக்க வாழ்த்துக்கள் !!!


Sampath
ஆக 12, 2025 18:21

ஒசாமா வை காட்டி கொடுத்தது யார் ? அடைக்கலம் கொடுத்தவன் எவனோ அவனே


kgb
ஆக 12, 2025 19:15

ஒஸம்மவை காட்டிக்கொடுத்தது ஒரு டாக்டர் DNA , அவரை சிறயில் வைத்துள்ளார்கள்


pv, முத்தூர்
ஆக 12, 2025 18:15

அதிகாரத்தைத் தேடி, டிரம்ப் அமெரிக்காவின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்கிறார். இரட்டை கோபுரங்களின் அழிவுக்கு காரணமான பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது என்ற வேதனையான உண்மையை அவர் புறக்கணிக்கிறார்.


V RAMASWAMY
ஆக 12, 2025 18:07

A sensible person in the US who can call spade a spade. Well said Sir.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 12, 2025 17:56

டிரம்ப்பை வைத்து இந்த கோட் சூட் போட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டு வந்து யாகியாக்கியான் போல் அடுத்த பாக்கிஸ்தான் சர்வாதிகாரியாக வருவான். ஒசாமா பின்லேடன் தாலிபான் போன்ற பயங்கரவாதிகளை எப்படி அமெரிக்கா உருவாக்கி உலகில் மேய விட்டு பின்னர் அவர்களையே ஒழிக்க அமெரிக்கா முன் வந்தது போல் இந்த முனீரை என்னும் பயங்கரவாத சர்வாதிகாரியை டிரம்ப் உருவாக்குவார் பின்னர் வரும் அமெரிக்கா அதிபர்கள் இந்த முனீரை ஒழிக்க முன் வருவார்கள். பயங்கர வாதத்தை உருவாக்குவது அமெரிக்காவின் பிறவிக்குணம்.


Padmasridharan
ஆக 12, 2025 17:56

நல்லது செய்ய நாலு பேரு ஒண்ணா கூடர மக்களிடையே, அழிக்கறதுக்குன்னே பிறந்தவங்க மாதிரி பேசக்கூடியவர்கள் பலரும் உண்டு சாமி. .


புதிய வீடியோ