உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள்; டிரம்ப் காட்டம்

வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள்; டிரம்ப் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.இது குறித்து, அதிபர் டிரம்ப் கூறியதாவது: வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள். இதுவரை இல்லாத அளவுக்கு பங்கு சந்தை உயர்ந்து, பணவீக்கம் இல்லாத நாடாக அமெரிக்கா உள்ளது. வரி விதிப்பதன் மூலம் உலகின் மிக பெரிய பணக்கார நாடாக அமெரிக்கா மாறி இருக்கிறது. தற்போது அமெரிக்கா அனைவராலும் மதிக்கப்படுகிறது.வரி வருவாயிலிருந்து, அதிக வருமானம் சம்பாதிப்பவர்களை தவிர மற்ற ஒரு நபருக்கு 2000 டாலர் ஈவு தொகையாக வழங்கப்படும். அமெரிக்கா வரிகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களை பெறுகிறது. முதலீடுகள் குவிந்து வருகிறது. தொழிற்சாலைகள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அதிபர் கூறினார். உலக நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விவாதங்கள் தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Senthoora
நவ 10, 2025 13:23

அப்போ எதுக்கு நியூயோர்க் நகரிலே உங்களுக்கு நம்மால் ஆப்பு அடித்தார்.


M Ramachandran
நவ 10, 2025 12:31

உன்னை பார்த்தல் புத்தி சாலியாக தெரிய வில்லையே. வியாபார புத்தியை காட்டி சொந்த நாட்டிலியே மக்கள் உன்னைய்ய வேறுக்கிறார்களெ.


Santhakumar Srinivasalu
நவ 10, 2025 11:25

அரசு ஊழியர்கள் சம்பளத்தை முடக்கிய அதி புத்திசாலி!


Ramesh Sargam
நவ 10, 2025 10:54

ஒரு நபருக்கு 2000 டாலர் ஈவு தொகை கொடுக்கத்தெரிந்த உங்களுக்கு, அமெரிக்க அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பல லட்சம் ஊழியர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க திராணியில்லை. மேலும் நாட்டின் உட்பத்தியைப்பெருக்கி அதன் மூலம் நிதியை பெருக்கவேண்டும். அப்படி செய்வதை விட்டுவிட்டு, வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை பலமடங்கு அதிகப்படுத்தி நிதி திரட்டுவது ஒரு மாபெரும் போற்றத்தக்க செயலா?


John K
நவ 10, 2025 09:09

I request Mr Trump to search his name in Google based on his photo and make such commo


பாமரன்
நவ 10, 2025 08:40

தன் நாட்டின் நலனுக்கு எது தேவையோ அதை அருமையாக செய்கிறார் பெட்ரோல் பம்ப்பு... நம்மாளு மாதிரி ஊள உதார் விட்டு தோஸ்துகளை மட்டும் கவனிக்காமல் எல்லாருக்கும் கலெக்சனை பிரிச்சும் குடுக்கிறார்... இந்த மாதிரி இருந்தா பகோடாஸ் திட்டத்தான் செய்வாங்க...


தெய்வேந்திரன்,சத்திரக்குடி இராமநாதபுரம்
நவ 10, 2025 18:05

எம்பூட்டு அறிவு! அதாவது புள்ளைக்கு என்று சொல்ல வந்தேன்..


S. Gopalakrishnan
நவ 10, 2025 08:03

நோபல் அமைதிப்பரிசு ஏன், இயற்பியல் பரிசுக்கும் தகுதியானவர் இவர் .....


VENKATASUBRAMANIAN
நவ 10, 2025 08:03

திமுக விடம் பயிற்சி எடுத்துள்ளார் போலும். ஆனால் ராகுல் போல் ஆற்றுகிறார்.


Senthoora
நவ 10, 2025 13:21

என்ன மறந்தாச்சா, யாரு நின்னா வரி, இருந்தாவரி, வங்கியில் பணம் போட்டா, எடுத்தா, பணம் இல்லாட்டியும் வரி போட்டது. உங்க ஜி ஆட்சியில் தானே.


duruvasar
நவ 10, 2025 08:03

சுங்க வரியால் அவதிப்படுபவர்கள் தன் நாட்டு மக்கள்தான் என்பதையுணராதவர்களும் முட்டாள்களே


vee srikanth
நவ 10, 2025 12:07

முகமது பின் துக்லக் தான் ஞாபகம் வருகிறது


முக்கிய வீடியோ