உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை: சசிதரூர்

துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை: சசிதரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போகோடா: பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்காது எனக்கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா புரிந்து கொண்டு உள்ளது. ஆனால், நெற்றிக்கு முன் துப்பாக்கி வைத்து கொண்டு பேச்சு நடக்கும் என்பதை நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.'ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியாவுக்கு சென்றுள்ளது.சர்வதேச உறவுகளுக்கான கொலம்பியா கவுன்சில் உறுப்பினர்களுடன் சசி தரூர் கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது: அஹிம்சை மூலம் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்திய மஹாத்மா காந்தியின் மண்ணைச் சேர்ந்தவர்கள். அதேநேரத்தில், எங்களை பொறுத்தவரை அமைதி என்பது சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். பயத்தில் இருந்து விடுதலை பெற்றதாக இருக்க வேண்டும். அமைதிக்கான மனிதரான மஹாத்மா காந்தி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். நாம் அமைதியாக அமர்ந்து கொண்டு, கன்னத்தை வேறு பக்கம் திருப்ப முடியாது. நமது நம்பிக்கையில் எது சரி என நினைக்கிறோமோ அதற்காக துணிவுடன் நிற்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியா அதனை சரியாக செய்து வருகிறது.பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. ஆனால், நமது நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது கொள்கையாக வைத்து உள்ளது. பயங்கரவாத முகாம்களை அந்நாடு ஒழிக்கும் போது, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி யோசிக்க முடியும். அதுவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது.காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். காஷ்மீர் வளர்ந்து கொண்டிருக்கும்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்த போது, பயங்கரவாதிகள் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதனால், காஷ்மீரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

xyzabc
ஜூன் 01, 2025 00:47

Sashi sir, you are so clear in expressing your thoughts on behalf of the government of India. Well done.


Ramesh Sargam
மே 31, 2025 20:57

பாகிஸ்தானிய அரசு ஒருக்காலும் அங்குள்ள பயங்கரவாதிகள் கூடாரங்களை அழிக்கவே மாட்டார்கள். அது இந்திய ராணுவ வீரர்களால் மட்டும்தான் முடியும். பயங்கரவாத முகாம்களை அழி அழி என்று அவர்களிடம் கோரிக்கைவிடுவது வீண்.


spr
மே 31, 2025 19:11

"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்பதனை நிரூபிப்பது போல, இந்தியக் குடியாட்சியின் எதிரிக் காட்சியைச் சேர்ந்தவர் எனினும், ஒரு பொறுப்பான முன்னாள் மத்திய அமைச்சராக திரு சசி தரூர் பேசியிருக்கிறார். பாராட்டுவோம். பாகிஸ்த்தானுடன் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் குறித்த பேச்சு வார்த்தைகள் இன்னமும் முறியவில்லை. ஆனால் இப்பொழுது நடந்திருப்பது பயங்கரவாதிகளின் மேலான காவற்துறை நடவடிக்கையே அன்றிப் போரல்ல. வெளிநாட்டில் நடத்தப்பட வேண்டிய காவற்துறை செயல்பாடு என்பதால் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது அவ்வளவே மேலை நாடுகள் காசு கொடுத்தால் தங்களது ஆயுதக்க கருவிகளை பாகிஸ்தானுக்கு கொடுப்பதை நாம் குறை சொல்ல முடியாது அது வியாபாரம் பயங்கர வாதம் உலகம் தழுவிய பிரச்சினை அதனை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் இருக்கக்கூடாது. எனவே பயங்கர வாதத்தை எதிர்க்கும் மேலை நாடுகள் பாகிஸ்தானை ஆதரிக்கக்கூடாது ஆயுதங்களை வாங்க உலக வங்கி பாகிஸ்தானுக்கு நிதியில்லாமல் செய்தால் போதும் இதுதான் இந்தியாவின் கோரிக்கை


Priyan Vadanad
மே 31, 2025 16:16

நமது நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை என்று சசி சொன்னதாக செய்தியில் இருக்கிறதை வாசிக்கும்போது ஒருவேளை இது மூன்றாவது ஒரு தலைவரின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதாக இருக்குமோ மேலும் முப்படை தளபதி ப்ளூம்பெர்க் வலைதளத்தில் சண்டையில் கிழியாத சட்டையா என்பதுபோல நமது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்தருகிறது என்று மறைமுகமாக குறிப்பிட்டதுபோல தெரிகிறது.


ஆரூர் ரங்
மே 31, 2025 16:46

200 சார். விமானத் தாக்குதல் நடந்தது நமது எல்லைக்குள்ளிருந்தே நடத்தப்பட்டது. பின் இங்குள்ள பொது மக்களுக்கும் தெரியாமல் எப்படி கீழே விழுந்திருக்கும்? விமானங்கள் சேதமடைய வேண்டும் என்பது உங்க நப்பாசை. ஆனா நடக்காது.


vivek
ஜூன் 01, 2025 06:12

பிரியன் என்பவர் 200 ரூபாய் ஊசி போன வடை என்பது தெளிவாக தெரியுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை