உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!

டிரம்ப் பற்றி விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பற்றி, வெளியிட்ட பதிவுகள் வரம்பு மீறி சென்றுவிட்டதால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்தார்.குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக போன மாதம் வரை இருந்த எலான் மஸ்க், தற்போது அவரின் எதிரியாக மாறிவிட்டார். இருவரின் சமீபத்திய மோதல்களை உலகமே ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yq0uq5sw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதாவால் நாட்டின் கடன், 200 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எலான் மஸ்க் கூறினார்.பின்னர், ''எலான் மஸ்க்குடனான உறவு முடிந்துவிட்டது. அவர் அதிபர் பதவியின் மாண்புக்கு அவமரியாதை செய்துவிட்டார்'' என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து டிரம்ப், எலான் மஸ்க் ஆகிய இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்தனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்தது.தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜூன் 11, 2025 18:57

இதே போலத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் மீது விமர்சனம் வைத்தார் - அவர் பதிலுக்கு வெளுத்து வாங்கியபின்னர் மன்னிப்பு கேட்டார்.


sankaranarayanan
ஜூன் 11, 2025 18:35

இரண்டும் அடித்துக்கொண்டால்தான் பல உண்மைகள் வெளிவரும் உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று இருவரும் மக்களுக்கு தோப்புக் கரணம் போட்டால் தான் இவர்கள் இருவருக்கும் அரசியலில் விமோசனம் கிடைக்கும்.


என்றும் இந்தியன்
ஜூன் 11, 2025 16:41

இதைத்தான் அரசியல்வாதிகள் என்பது


Ramesh Sargam
ஜூன் 11, 2025 13:56

மீண்டும் காதலா? நம்ம அரசியல்வாதிகளை மிஞ்சிட்டாங்க.


KavikumarRam
ஜூன் 11, 2025 13:46

இந்த காமெடியன்களுக்கு வேற வேல இல்ல. இவனுங்கள வச்சு வின்னர் 2 படம் தயாரிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை