உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி: 9 பேர் காயம்!

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி: 9 பேர் காயம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்து உள்ளனர்.அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று உள்ளது. அங்கு பலர் கூடியிருந்தபோது திடீரென அங்கிருந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அதை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்தான். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பர்ட்டனைச் சேர்ந்த 40 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், ''இது நாட்டில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்'' என தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மிச்சிகனில் உள்ள கிராண்ட் பிளாங்கில் உள்ள தேவாலயத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கப்பட்டது. எப்பிஐ அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இறந்துவிட்டார். இது அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது நாட்டில் இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.

துணை அதிபர் கண்டனம்

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''மிச்சிகனில் ஒரு மோசமான சூழ்நிலை. எப்பிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். அங்கு நடக்கும் அனைத்து விஷயங்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை